உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிலத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டும் மசோதாவை அனுமதிக்கக் கூடாது: கவர்னரிடம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

கோவில் நிலத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டும் மசோதாவை அனுமதிக்கக் கூடாது: கவர்னரிடம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவில் நிலத்தில், கல்வி நிறுவனங்கள் கட்ட அனுமதிக்கும் மசோதாவுக்கு, அனுமதி தரக்கூடாது' என, கவர்னர் ரவியிடம், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை கிண்டி லோக் பவனில், நேற்று கவர்னர் ரவியை, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பொதுச்செயலர் கிஷோர்குமார், அமைப்பாளர் ராஜேஷ், செய்தி தொடர்பாளர் இளங்கோவன், செயலர் சேவுகன், தென்பாரத அமைப்பாளர் பக்தவத்சலம், ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, கவர்னரிடம் அவர்கள் அளித்த மனு:

கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில், கோவில் நிதியில், கல்வி நிறுவனங்கள், இசைப் பள்ளிகள், ஓதுவார் பள்ளிகள் கட்டுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா, தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை, ஒட்டுமொத்தமாக அழிக்கும் உள்நோக்கம் கொண்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்கள், பராமரிப்பின்றி உள்ளன. இந்த மசோதா சட்டமானால், கோவில் நிலங்கள் கொள்ளை போவதற்கும், கோவில் நிதியில் ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபத் துாணில், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து, கவர்னர் ரவி கேட்டார். உயர் நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசு மதிக்கவில்லை; நீதித்துறையை இழிவுபடுத்தும் நோக்கில், தமிழக அரசு செயல்படுவது, அரசமைப்பு சட்டத்தின் மாண்பை சீர்குலைக்கும் செயல். இதனால் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம், மக்களுக்கு ஏற்படும் என, கவர்னரிடம் எடுத்து கூறினோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SRIDHAAR.R
டிச 09, 2025 07:37

கோயில் நிலத்தை விற்கவும் தடைசெய்து இந்து கோயில்களை காப்பாற்றுங்கள் ஆள்பவர்களே


சிட்டுக்குருவி
டிச 09, 2025 06:09

நமது நாடு மற்றும் மாநிலங்கள் எல்லாமே அரசியல் சாசனப்படி மதசார்பாற்றவை .எந்த ஒரு அரசும் மதம்சார்ந்து ஆட்சிசெய்யமுடியாது .நாம் சுதந்திரம் அடைந்தபோது வரும் 12 சதவீத மக்களே குறைந்த அளவு எழுத படிக்க தெரிந்தவர்களாக இருந்தார்கள் .படித்தோர் எல்லோருமே அரசு அலுவல்களில் ,அல்லது ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் .மாநிலத்தில் ஏகப்பட்ட கோவில் சொத்துக்கள் இருந்தன .அதை பாதுகாக்கவும் ,பயனுள்ளதாக ம்மாற்றக்கூடிய அளவில் பொதுமக்களிடையே ஞானம் இருக்கவில்லை .அதனால் 1959 ஆம் ஆண்டு சொத்துக்களை பராமரிக்கவேண்டி அரசே நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்ந்தம் இருந்தது .அப்போது அரசு நல்லெண்ணத்தோடு HR&CE ஆக்ட் 1959 இயற்றப்பட்டது .அதுவே பின் காலங்களில் அரசே கோயில்களை எல்லாம் அரசுடைமையாக்க வழிகோலியது .HR&CE ACT 1959 இல் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றது என்பது எனக்கு தெரியாது ஆனால் அரசு கோயில்களை அரசுடைமையாகியது ,அரசு வழிபாட்டுத்தலங்களுகுளுடைய வழிபாட்டு முறைகளில் தலையிடுவது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் புறம்பானது .அரசியல் சாசனம் ARTICLE 26 ம் 27ம் முற்றிலும் மீறப்பட்டிருக்கின்றது . சிலர் முன்காலங்களில் உச்சநீதி மன்றத்தை நாடியபோது அவர்கள் முதலில் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள் .கடலூர் வழக்கறிஞ்சர் ஒருவர் உயர்நீதிமன்றத்தை நாடியபோது உயர்நீதிமன்றம் அனுமதிக்கவில்ல என்பதால் மனுவை வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவிக்கின்றன .இதுவரை உச்சநீதிமன்றம் செல்லவில்லை .ஆகவே காடேஷ்வர் சுப்பிரமணியம் மனுவை எடுத்துக்கொண்டு அலைவதை விடுத்து அரசு வழிபாட்டு தளங்களில் தலையிடுவது ,ஏற்றுநடத்துவது மேல்குறிப்பிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதை அறிவிக்க கோரி முதலில் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் .ஒருவேளை உயர்நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால் உச்சநீதிமன்றம் கொண்டுசென்று அரசியல் சாசன அமைப்பு விசாரணைக்கு மனுசெய்யவேண்டும் .அரசியல் சாசனம் மீறல் என்பதால் கட்டாயம் அனுமதிக்கப்படும் என்பது உறுதி .


Kasimani Baskaran
டிச 09, 2025 03:57

இந்துக்கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இவர்களால் ஆடமுடியும். அதை சரி செய்தால் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை மட்டுமே அவர்களால் பார்க்கமுடியும்.


vaiko
டிச 09, 2025 03:56

அப்படியே ஒரு மனுவை நம் நீதிபதி சாமிநாதனிடமும் கோடுங்கள். அவர் நம் கோரிக்கையை நெறிவேற்றி உத்தரவு போடுவார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை