உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்

இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: இந்தியாவில் முதல்முறையாக, மருத்துவமனைகளுக்கு இடையேயான கல்லீரல் மாற்று சிகிச்சை கோவையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.கோவை ஜெம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைகள் இடையேயான, இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதன் வாயிலாக, இறுதி நிலை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட, இரு நோயாளிகளுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, சேலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருக்கும், கல்லீரல் பாதிப்பு இருந்தது. அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உறுப்பு தானம் செய்ய அவர்களின் மனைவியர் முன்வந்தனர். ரத்தகுரூப் வேறாக இருந்ததால், தானம் செய்ய முடியாமல் போனது. ஜெம் மருத்துவமனையில் உள்ள நபரின் மனைவியின் கல்லீரலை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள நபருக்கும், இவருடைய மனைவியின் கல்லீரலை ஜெம் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் கொடுக்க வாய்ப்புள்ளது தெரிந்தது. இருவருக்கும் இணை மாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த கல்லீரல் மாற்று சிகிச்சை இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழகத்தின் கோவையில் வெற்றிகரமாக நடந்து பாராட்டை பெற்றுள்ளது. அப்போது, இரண்டு மருத்துவ குழுவினரும் தொடர்பு கொள்ளும் வகையிலான வசதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சை முடிந்த இருவரும் நலமுடன் உள்ளனர்.

புதிய நம்பிக்கை

ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில், ''கல்லீரல் செயலிழப்பாலும் தகுந்த கொடையாளர்களின் பற்றாக்குறை இருப்பதாலும், ஆண்டுதோறும் 25,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து வருகிறார்கள். தற்போது, இந்த இரண்டு மருத்துவமனைகள் இணைந்து செய்துள்ள சாதனை, பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இந்த வெற்றி, எதிர்காலத்தில் இதுபோல பல மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் நடக்க, நல்ல துவக்கமாக அமையும்,'' என்றார்.

அர்ப்பணிப்பு

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கூறுகையில், ''தமிழகத்தின் மருத்துவ சிறப்பிற்கான மைல்கல்லாக, இணை மாற்ற உறுப்பு மாற்று சிகிச்சை அமைந்தது. மருத்துவ குழுவினர், சிக்கலான செயல்முறையை துல்லியத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்தனர்,'' என்றார். இது மருத்துவமனைக்குள் மாற்று அறுவை சிகிச்சை என்பதால், சட்ட சிக்கல்கள் இருந்தன. நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைகள் இரண்டு மருத்துவமனைகளிலும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டியிருந்தது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதற்காக இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையே சுமார் 3.5 கி.மீ. பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ஜூலை 3ம் தேதி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VSMani
ஜூலை 19, 2025 11:20

பாளையம்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் VAO, RI, தாசில்தார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?


VSMani
ஜூலை 19, 2025 11:20

கடந்த ஆண்டு எனது தம்பி 33 வயதில் Non alcoholic fatty liver நோயினால் இறந்து விட்டார். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் கேட்டு விண்ணப்பித்தும் லஞ்சு பேர்வழிகள் சாந்திநகர், பாளையம்கோட்டை 3 திருநெல்வேலி மாவட்டம் தலையாரி, VAO பெருமாள், RI, தாசில்தார் லஞ்சம் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் தர மறுத்துவிட்டனர். அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது. பாளையம்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் VAO, RI, தாசில்தார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?


Rajagopal Mohankumar
ஜூலை 19, 2025 10:45

மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள். சிகிச்சை பெற்ற நால்வரும் குணமடைய பிரார்த்திக்கிறேன்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2025 09:28

புகைப்படத்தில் வலமிருந்து இரண்டாவதாக நிற்பவர் டூப்ளிகேட் அப்பா போல இருக்கிறார்


raju
ஜூலை 19, 2025 08:23

அருமை அருமை பாராட்டியே ஆக வேண்டும். இதன் மூலம் மனித உறுப்பு தட்டுபாடுகள் குறையும்.


Varadarajan Nagarajan
ஜூலை 19, 2025 07:56

உறுப்பு தான விதிகளின்படி சட்ட சிக்கலான இந்த பெரிய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவக்குழுக்களுக்கும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் பாராட்டுக்கள். உரியகாலத்தில் முறையான அனுமதிவழங்கிய மருத்துவத்துறை மற்றும் நீதித்துரைக்கும் பாராட்டுக்கள். உறுப்பு தானம் பெற்றவர்களும் தானம் அளித்தவர்களும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றேன்


Thravisham
ஜூலை 19, 2025 07:55

அபாரம். சூப்பர் நான்கு பேரும் உடல் நலம் பெற கடவுள் அருளை வேண்டுகிறேன்.


சமீபத்திய செய்தி