காஞ்சிபுரம்:கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த, தன் இரு குழந்தைகளையும் கொன்ற தாயான, 'பிரியாணி' அபிராமிக்கும், உடந்தையாக இருந்த கள்ளக்காதலனுக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரைச் சேர்ந்தவர் விஜய், 30. இவரது மனைவி அபிராமி, 25. இவர்களுக்கு அஜய், 6, என்ற மகனும், கார்னிகா, 4, என்ற மகளும் இருந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dnor4stz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏ.டி.எம்., இயந்திரங்க ளுக்கு பணம் நிரப்பும் பணியை விஜய் செய்து வந்துள்ளார். இவரது மனைவி அபிராமிக்கும், அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஊழியர் மீனாட்சிசுந்தரம், 25, என்பவருக்கும் இடையே, சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. பிரியாணி சப்ளை மேலும், அபிராமி வீட்டிற்கு மீனாட்சிசுந்தரம் அடிக்கடி பிரியாணி சப்ளை செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள் இருவரையும் கொலை செய்துவிட்டு, மீனாட்சிசுந்தரத்துடன் வாழ அபிராமி ஆசைப்பட்டார். கடந்த 2018 செப்டம்பர் 1ல், அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை கொடுத்து, இரு குழந்தைகளையும் தாயே கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குழந்தைகளை கொன்றுவிட்டு, கள்ளக்காதலன் மீனாட்சிசுந்தரத்துடன் வெளியூருக்கு அபிராமி தப்ப முயன்ற போது, குன்றத்துார் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம் துவக்கப்பட்டதால், 2024 ஜூன் 13ல் இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமூலத்தை தெரிவித்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா வாதாடி வந்தார். விசாரணை முடிந்த நிலையில், ஜூலை 24ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நேற்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், போலீசார் என பலரும் குவிந்திருந்தனர். கதறி அழுதனர் புழல் சிறையில் இருந்து அபிராமி, மீனாட்சிசுந்தரம் ஆகியோரை தாமதமாக அழைத்து வந்ததால், போலீசாரை நீதிபதி செம்மல் கடிந்து கொண்டார். இதையடுத்து, நீதிபதி செம்மல் நேற்று பகல் 12:00 மணியளவில் தீர்ப்பு வழங்கினார் . அப்போது, அபிராமி, கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரம் இருவரும் குழந்தைகளை கொலை செய்தது, சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்; மேலும், இருவருக்கும் தலா, 15,000 ரூபாய் அபராதமும் விதித்தார். தீர்ப்பை கேட்டதும், அபிராமி, மீனாட்சிசுந்தரம் இருவரும் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதனர்.