கரூர் சம்பவம் தனி நபர் பொறுப்பல்ல
கூட்டத்தை சேர்ப்பது பெருமை என்ற மனப்பான்மை எல்லாருக்கும் உள்ளது. அதை ஊடகங்களும் தொடர்ச்சியாக பெரிதுபடுத்திக் காட்டுவதால், கூட்டத்தின் மீது எல்லாருக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. கரூரில் அப்படிப்பட்ட ஈர்ப்பில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. இப்படி கூட்டம் கூட்டப்படும்போது, அங்கு மோசமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன. கரூரில் நடந்த சம்பவத்துக்கு தனி நபர் மட்டும் காரணமல்ல; பொறுப்பும் அல்ல. கூட்டமாக கூடிய ஒவ்வொருவரும் தான் பொறுப்பு. சமூகத்தில் கூட்டத்தை சேர்ப்பது குறித்த மோகம் அதிகமாகி விட்டது, இது முடிவுக்கு வர வேண்டும். ஹீரோ வழிபாடு கலாசாரம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தவறான பெயரை ஏற்படுத்துகிறது. வெற்றி என்பது ஒரு காட்டு குதிரை போன்றது. யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறலாம். ஆனால், அதை அடக்க முடியாவிட்டால், அது உங்களை துாக்கி எறிந்துவிடும். - அஜித்குமார் திரைப்பட நடிகர்