உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு; ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மதுரை: மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலுாரில், 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடக்கும் விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் வழங்குகிறார்.முன்னதாக, மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்