வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் பேட்டி
வளசரவாக்கத்தில் உள்ள, அவர் ஏஞ்சல் பள்ளியில் கணினி அறிவியல் படிக்கிறேன். 'சைபர் செக்யூரிட்டி' படிக்க விரும்புகிறேன். படிப்பு மட்டும் போதாது, திறன்களை கற்க வேண்டும் என்பது, இங்கே வந்த பிறகே தெரியவந்தது. -எஸ்.அபர்ணா, வளசரவாக்கம். பி.டெக்., -- சி.எஸ்.சி., படிக்கலாம் என்று நினைத்திருந்தேன். வழிகாட்டி நிகழ்ச்சி வாயிலாக, சி.எஸ்.சி., படிப்போடு தொடர்புடைய வேறு சில படிப்புகளையும் தெரிந்து கொண்டேன். - பி. பெஞ்சமின், வேளச்சேரி. திருத்தங்கல் நாடார் வித்யாலயாவில், 'பயோ மேத்ஸ்' படிக்கிறேன். இ.சி.இ., படிக்க முடிவு செய்துள்ளேன். இங்கு, ஜே.இ.இ., மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகள் குறித்த தெளிவு கிடைத்தது. ஜெயப்பிரகாஷ் காந்தி கூறிய ஏ.ஐ., குறித்த தகவல்கள் பயனளித்தன. - கு.ஜீவிதா, திருவொற்றியூர். 'நீட்' தேர்வு எழுதி டாக்டர் ஆவதே என் லட்சியம். அது குறித்த பல தெளிவுகள் வழிகாட்டியில் கிடைத்தன. நிகழ்கால கல்வி நிலையங்கள் குறித்த நடைமுறைகளை, அஸ்வின் போட்டுடைத்தது பிடித்தது. - தருணிகா, திருவொற்றியூர். மதுராந்தகத்தில் உள்ள வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 15 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக உள்ளேன். எட்டு பிளஸ் 1 மாணவர்கள் வந்துள்ளனர். பிளஸ் 2வில் எப்படி நம்மை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக அழைத்து வந்துள்ளேன். - ஜி.பாலகுரு, 34. மதுராந்தகம்.