உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நயினார் நாகேந்திரன் சென்ற காரை அசுர வேகத்தில் முந்திய காரால் அதிர்ச்சி

 நயினார் நாகேந்திரன் சென்ற காரை அசுர வேகத்தில் முந்திய காரால் அதிர்ச்சி

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சென்ற காரை, மற்றொரு கார் அசுர வேகத்தில் முந்திச் சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதற்காக, அவரும், கட்சியினரும் கார்களில் சென்றனர். அய்யனார்புரம் என்ற இடத்தில் கார்கள் சென்றபோது, அசுர வேகத்தில் புழுதி பறக்க வந்த ஒரு கார், முந்திச் சென்றது. இதனால், அதிர்ச்சிஅடைந்த பா.ஜ.,வினர், அந்த கார் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அந்த காரை, கடமலைக்குண்டு போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அந்த காரை ஓட்டிச் சென்றவர் ராயப்பன்பட்டியைச் சேர்ந்த அரவிந்தன் என்பதும், மது போதையில் காரை ஓட்டிச் சென்றதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அந்த கார் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் அசுர வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற அரவிந்தன் மீ து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடமலைக்குண்டு நிகழ்ச்சிக்கு பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: அரசு திட்டங்களுக்கு தி.மு.க., அரசு பெயர் சூட்டுவது போல இல்லாமல், 'மக்கள் மன்றம்' என, கவர்னர் மாளிகைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது? முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.,வில் இணையும் முன், யாரை சந்தித்து விட்டு சென்றார் என்பது துணை முதல்வர் உதயநிதிக்கு தெரியாதா? அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்த பின்தான், த.வெ.க.,வுக்கு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ