உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில், அறநிலையத்துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 2,376 திருமணங்கள் நடைபெற்றுள்ளது; அதில் 150 திருமணங்கள் நானே நடத்தி வைத்துள்ளேன். 3,127 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம். தி.மு.க., ஆட்சியில் 12 ஆயிரம் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்களைப் புனரமைக்க ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 7,000 ஏக்கருக்கு மேற்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன; பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். எல்லாரும் எல்லாம் என்ற மனம் கொண்டு தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.

பாராட்டுகின்றனர்

அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் எங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்.

கேலி செய்யுங்கள்

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள், அதை பற்றி கவலைப்பட போவதில்லை. மணமக்கள் பிறக்க போகும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Sakshi
ஜூலை 08, 2025 19:22

மக்கள் பணி தான, MLA & Minister salary edhukku? Urutta koodadhu...


Bhakt
ஜூலை 02, 2025 19:57

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் என் வூட்டு மக்கள் பணி தொடரும்


Raj S
ஜூலை 02, 2025 18:58

அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்...


அப்பாவி
ஜூலை 02, 2025 18:23

எனக்கு ஒரு தம்பி இருக்கான் தல. சீக்கிரம் என்னை கைது பண்ணி நாலு ரவுடி போலீசை உட்டு அடிச்சிக் கொன்னு, அவனுக்கு ஒரு அரசு வேலையும், ஒரு ஏக்கர் நஞ்செய்யும் குடுத்து செட்டில் பண்ணிருங்க தல.


suresh Sridharan
ஜூலை 02, 2025 18:14

ஆமாம் எத்தனை லாக் அப் மரணங்கள் ,மற்றும் கொலை கொள்ளை கற்பழிப்பு சிறுமியரையும் விட்டு வைக்காத அயோக்கியர்களுக்கான சட்டங்கள் இப்படி மிகப்பெரியதாக எது நடந்தாலும் அசராத முதல்வர் நமது சிங்கம் வாழ்க பணநாயகம்...


என்றும் இந்தியன்
ஜூலை 02, 2025 17:55

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் "சுரண்டல்கள்" பணி தொடரும் - ஸ்டாலின் என்று படிக்கவும் உண்மையான அர்த்தம் வரும்


VIDYASAGAR SHENOY
ஜூலை 02, 2025 17:01

கஞ்சா போதை பொருள் கள்ள சாராயம் எல்லாம் மக்கள் பணியா, இதற்க்கு ஒரு வசனம் தேவையா


மோகன்
ஜூலை 02, 2025 16:40

//உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர்.// அப்படியா? இது எப்போ?


மோகன்
ஜூலை 02, 2025 16:39

ஸ்டாலின் சார், ஆட்சி முடியப்போகுது. தூக்கத்துல இருந்து எழுந்திரிங்க. இன்னும் கொஞ்ச நாள்ல ஓட்டு கேக்க போகணும்.


Suppan
ஜூலை 02, 2025 16:23

அறமில்லாத துறையின் "அனுமதி" கிடைக்கவேண்டுமென்றால் பணிகளை கட்சி ஆட்களுக்கு கொடுக்கவேண்டும். மேல்கொண்டு கட்டிங்கும் உண்டு என்றேல்லாம் சொல்கிறார்கள். அந்த "அதிகாரி" நல்ல மாதிரியானவர் என்றால் பிழைத்தீர்கள். நீங்கள் பணியினைத்தொடரலாம். பிரச்சினை இல்லை. இதெல்லாம் எழுதப்படாத விதிகள்


சமீபத்திய செய்தி