உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ரூ.11 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய அதிகாரிக்கு உடனடி போஸ்டிங்!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ரூ.11 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய அதிகாரிக்கு உடனடி போஸ்டிங்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: ஊட்டியில் நவ.,9ம் தேதி லஞ்சப்பணம் 11.70 லட்சம் ரூபாயுடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர், நவ.,9ம் தேதி லஞ்சப்பணத்துடன் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர் செல்லும் வழியை கண்காணித்த போலீஸ் படையினர், யார் யாரிடம் என்ன வாங்குகிறார் என்பதை கண்டறிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e4pli56c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடைசியில், காரில் ஏறி அவர் செல்ல முயன்றபோது வழிமறித்து பிடித்தனர். போலீஸ் சோதனையில், அவரிடம் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. அந்தப்பணத்துக்கு அவரால் எந்தக் கணக்கும் சொல்ல முடியவில்லை.லஞ்சப்பணம் என்பதை உறுதி செய்த போலீசார், யார் யாரிடம் அந்தப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதை விசாரித்தனர். இதில், வாகன நிறுத்துமிடத்தை ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர், துணிக்கடையை ஹோட்டலாக மாற்ற விண்ணப்பித்த சாகுல் ஹமீது ஆகியோர் கொடுத்த லஞ்சப்பணம் என்பது தெரிய வந்தது.லஞ்சப்பணத்துடன் கையும், களவுமாக சிக்கிய அவர் மீது வழக்கு கடந்த 10ம் தேதி பதியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.கணக்கில் வராத பணத்துடன், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய ஒரு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு 3 வாரங்களுக்குள் எப்படி அவர், வேறு ஒரு புதிய பணியிடத்துக்கு நியமனம் செய்யப்பட்டார்; அவர் மீதான துறை விசாரணை நடத்தப்பட்டதா, அவருக்கு உதவி செய்தது யார் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.இது பற்றிய தகவல் வெளியானதும், பல்வேறு தரப்பிலும் அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. 'இது, எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி' என்று ஆளும் கட்சியினர் அடிக்கடி கூறிக் கொள்வது வழக்கம். அதைக்குறிப்பிட்டு, நெட்டிசன்கள், அரசை விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

QCS MCCL
டிச 04, 2024 09:23

திமுக அரசே கலவனிப்பய மக்களின் அரசு, இதிலென்ன ஆச்சரியம் திருடர்களுக்கு லஞ்சவாதிகளுக்கும் ஆதரவாக இருப்பதில்? அடுத்து ஜாமத்திலும் சர்ச்சிலும் நடக்கும் ஆட்சியே திமுக அரசு.


Karthik
டிச 01, 2024 11:03

லஞ்சத்திற்கு, லஞ்சம் வாங்கிய ஆட்சியாளர்களுக்கு / கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்கள் இருக்கும்வரை "அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தான். மற்றவர்களுக்குத்தான் இது பெரிய ரணம்.


Natarajan Ramanathan
நவ 30, 2024 18:07

மிக முக்கியமான அமைச்சருக்கே ஜமாத்திலிருந்து மிரட்டல் வந்ததாக தகவல்.


sundar
நவ 30, 2024 04:49

ஏற்கெனவே அப்பர் கோதையாறு விருந்தினர் மாளிகையில் இருந்தவாறு பாட்டில்களின் வரவு செலவுக் கணக்கை ஒருவர் பார்க்கிறார். அவருடன் இவரைக் கோர்த்து விடலாம்.பணிச்சுமை குறையும்


joe
நவ 28, 2024 18:37

திராவிட மாடலின் ஊழல்


joe
நவ 28, 2024 18:37

யோக்கியமான "திராவிடன் அரசியல் செய்கிறார் "


joe
நவ 28, 2024 18:32

2G ஊழல் குற்றவாளிகளையும் ,செந்தில் பாலாஜியின் தம்பியையும் சட்டத்தின் பிடியில் இருந்து மறைத்து காவல் காக்கும் "திராவிடமாடலுக்கு இதெல்லாம் சகஜமய்யா"


john joe
நவ 28, 2024 17:54

திராவிட மாடலின் சர்வாதிகாரம் .....அதாவது இதுதானாடா "யோக்கியமான திராவிடம் ."


N Sasikumar Yadhav
நவ 28, 2024 09:26

திருட்டு திராவிட மாடல் களவானிகள்மீது வைக்கப்படும் விமர்சனம் பாக்கெட் நிரம்பாது அரசு ஊழியன்கள் வாங்கும் லஞ்ச பணத்தால் தான் திருட்டு திராவிட களவானிங்க பாக்கெட் நிரம்பும்


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 21:25

திராவக மாடலில் இதெல்லாம் சகஜமப்பா


புதிய வீடியோ