மேலும் செய்திகள்
பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்
3 minutes ago
நாஞ்சில் சம்பத்திற்கு பதவி
19 minutes ago
சென்னை: 'இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படித்தவர்கள், 'தனி மதிப்பீட்டு சான்று' பெற தேவை இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. டில்லி, இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், பி.எட்., பட்டம் பெற்றவர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம், தனியாக மதிப்பீட்டு சான்று பெற வேண்டும் என, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தெரிவித்து வந்தனர். இதை பெற, ஆசிரியர்கள் அலையும் நிலை உள்ளது. இந்த சான்று இல்லாவிட்டால், தணிக்கையின் போது நிராகரிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையால் வழங்கப்படும் பி.எட்., சான்றின் நிலை குறித்து, உயர்கல்வித் துறை ஏற்கனவே மதிப்பீடு செய்து, அந்த சான்றிதழ், தமிழக பல்கலைகளால் வழங்கப்படும் பி.எட்., பட்டச்சான்றுக்கு இணையானது என, அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், தனியாக மதிப்பீடு செய்து, சான்று பெறத் தேவை இல்லை என, பள்ளிக்கல்வித் துறை தற்போது தெளிவுபடுத்தி உள்ளது.
3 minutes ago
19 minutes ago