உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்லி.,2ம் நாள் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு

பார்லி.,2ம் நாள் கூட்டத்தொடர்; எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்று (டிச.,02) எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.,01) துவங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், செங்கோட்டையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், புதிய தொழிலாளர் சட்டங்கள், எஸ்.ஐ.ஆர்., விவகாரம் ஆகியவற்றை விவாதிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் முதல் நாளே சபையை முடக்கினர்.இந்நிலையில் இன்று (டிச.,02) 2வது நாள் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபா கூடியதும் எஸ்ஐஆர் பணி குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை. அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 12 மணி வரை ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல், ராஜ்யசபாவை இன்று (டிச.,02) துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் 2வது நாளாக நடத்தி வருகிறார். அங்கு விவாதங்கள் நடந்து வருகிறது. முன்னதாக, பார்லி வளாகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) கண்டித்து, இண்டி கூட்டணி எம்பிக்கள் ஆர்பாட்டம் நடத்தினர். இதனால், பார்லிமென்ட் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ