உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தீபத்துாணில் கார்த்திகை தீபம் கிராம சபையினர் மனு

 தீபத்துாணில் கார்த்திகை தீபம் கிராம சபையினர் மனு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவை அமல்படுத்த கோரி, திருப்பரங்குன்றம் கிராம சபை, திருப்பரங்குன்றம் பூர்வீக மிராஸ் வகையறாக்கள் சார்பில் கோவில் நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. மனுவில், 'திருப்பரங்குன்றம் கிராம பூர்வீக குடிமக்களாகிய நாங்கள், மன்னர் திருமலை நாயக்கர் காலம் தொட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருப்பணி செய்து வருகிறோம். 'எங்கள் முன்னோர் வழிபட்ட பாரம்பரிய தீபத்துாணில் தீபம் ஏற்ற எங்களை அனுமதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ