மேலும் செய்திகள்
பறவைகள் கணக்கெடுப்பு வரும் 27ல் துவக்கம்
6 minutes ago
நாஞ்சில் சம்பத்திற்கு பதவி
22 minutes ago
சென்னை: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தின் ஐந்து அலகுகளிலும், மின் உற்பத்தி முடங்கியுள்ளது. துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. துாத்துக்குடி மின் நிலையத்தின் முதலாவது, இரண்டாவது அலகுகளில் தீ விபத்து காரணமாக, இந்தாண்டு மார்ச், 15ம் தேதி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக நான்காவது அலகில், நவ., 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும்; ஐந்தாவது அலகில் நவ., 23ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
6 minutes ago
22 minutes ago