உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமதாஸ் -அன்புமணி கடும் மோதல்; பா.ம.க., பொதுக்குழுவில் தொண்டர்கள் அதிர்ச்சி

ராமதாஸ் -அன்புமணி கடும் மோதல்; பா.ம.க., பொதுக்குழுவில் தொண்டர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க., தலைவர் அன்புமணி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.புதுச்சேரியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v1eqhoau&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்வதற்கு' என அன்புமணி முட்டுக்கட்டை போட்டார்.இதற்கு டென்ஷனான, ராமதாஸ், 'நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ'' என கூறினார். அதுமட்டுமின்றி, 'நான் உருவாக்கிய கட்சி' என்று ராமதாஸ் 3 முறை திட்டவட்டமாக தெரிவித்தார்.இதற்கு குறுக்கே, 'நீங்கள் சொல்லுங்கள். பண்ணுங்கள் என்று அன்புமணி பதில் அளித்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி, 'பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வரலாம்' என்று அறிவித்துள்ளார்.

தீர்மானங்கள்

சிறப்பு பொதுக்குழுவில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், தமிழக அரசு, 3 முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணத்தை உடனடியாக தர வேண்டும்.டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

sankaranarayanan
டிச 28, 2024 21:06

இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ என கூறினார். அதுமட்டுமின்றி, நான் உருவாக்கிய கட்சி என்று ராமதாஸ் 3 முறை திட்டவட்டமாக தெரிவித்தார். காடுவெட்டி சென்ற உடனே கட்சி பிச்சிக்கிச்சி இப்போ எஞ்சிய பாக்கி இருக்கிற நபர்களும் அன்புமணியை நோக்கி சென்றுவிடுவார்கள் ஐயாவாள் இனி மருத்துவமும் பார்க்கமுடியாது கட்சிப்பணிகளையும் பார்க்கவே முடியாது , மருத்துவர் அய்யா இனி ஒய்வு எடுத்துக்கொண்டால்தான் நல்லது


Mohan
டிச 28, 2024 20:47

என்னங்கய்யா திமிரு இது எதுக்கெடுத்தாலும் பாஜக வை இழுத்து சவட்டறது??.அப்போ பாஜக காரனுங்களுக்கு மகனோ மகளோ இருக்கக்கூடாதுங்கற மாதிரி அராஜகமா பேசுறீங்க திமுக வாரிசுக்களை முன்னுக்கு கொண்டுவர கட்சியை நாசமாக்கிய மாதிரி எவரும் பாஜகவில் செய்ததில்லை. சும்மா உதார் விடாதீங்க


Indhuindian
டிச 28, 2024 20:20

மாம்பஷம் அஷுகத்தொடங்கிவிட்டது சீக்கிரமே அதை தூக்கி குப்பைத்தொட்டியில்தான் போடவேண்டும்


MADHAVAN
டிச 28, 2024 18:04

பிஜேபி ல வாரிசு அரசியல் இல்லையா ? புதுசு புதுசா ரீலு உடுறீங்க ? எடியூரப்பா மகன் விஜயேந்திரா கர்நாடக - பிஜேபி தலைவர், ரேவண்ண மகன், ரேவண்ண மச்சினன்,அமித்ஷா மகன் ஜெய்ஷா,ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி.,-பிஜேபி தலைவர்.இன்னும் நிறைய இருக்கு,மூடிக்கிட்டு இருங்க.


முருகன்
டிச 29, 2024 07:35

சரியான பதிலடி


MADHAVAN
டிச 28, 2024 17:42

பிஜேபி ல வாரிசு அரசியல் இல்லையா ? என்னங்கடா புதுசு புதுசா ரீலு உடுறீங்க ? எடியூரப்பா மகன் விஜயேந்திரா கர்நாடக - பிஜேபி தலைவர் ரேவண்ண மகன், ரேவண்ண மச்சினன், அமித்ஷா மகன் ஜெய்ஷா, ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங் உ பி - பிஜேபி தலைவர் இன்னும் நிறைய இருக்கு,


RAMAKRISHNAN NATESAN
டிச 28, 2024 19:14

ஆம் .... அப்படிச் சொல்பவர்கள் புரிதல் இல்லாமல் சொல்கிறார்கள் .... எல்லாக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் உண்டு ... ஆனால் குடும்ப அரசியல் தமிழகத்தில் திமுகவில் மட்டும்தான் உண்டு ... ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி என்கிற அசிங்கம் திமுகவில் மட்டும்தான் ... தமிழகத்துக்கு வெளியே தெலுகு தேசம், காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளில் உண்டு ....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 28, 2024 22:21

மாதவரே, குடும்ப அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் முட்டுக்கொடுப்பதில் முதுகலை பயின்றதால் அப்படி கருத்து எழுதுகிறீர்களா?


Palanisamy Sekar
டிச 28, 2024 17:04

வாரிசு கட்சிகளிடையே இதெல்லாம் சகஜம். ஒரு வாரிசு கட்சியில் மூத்த மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு சென்றார் என்றெல்லாம் செய்திகளை சில ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டோம். அதுபோல இது சகஜமுங்க. மக்களாக பார்த்து திருந்தாவிட்டால் இதையெல்லாம் சகித்துக்கொண்டு படித்துக்கொண்டு போயிட்டே இருக்கணும். குடும்பத்தில் பேசுவதை பொது வீதியில் பேசுவதை ரசிக்க முடியவில்லை. அப்பாவும் சரி மகனும் சரி மெத்தபடித்தவர்கள். இப்படியா நடந்துகொள்வது. அருவருப்பான அரசியலாக இருக்கின்றதே. வயதானால் பொறுப்பினை மகனிடம் ஒப்படைத்துவிட்டு விலகி நிற்பதுதான் என்னைப்பொறுத்தவரை ராம்தாஸ் அவர்களுக்கு சொல்வேன். அன்புமணியிடம் ஒப்படையுங்கள். அவரால் நிச்சயம் கட்சியை வழிநடத்த முடியும். ஊரார்கள் கைகொட்டி சிரிப்பார்கள் எனபதை கூடவா மறந்துவிட்டனர் இருவருமே . படிக்கவே கூசுகின்றது.


SUBRAMANIAN P
டிச 28, 2024 16:46

கட்சி குடும்ப சொத்தாக இல்லாத ஒரே கட்சி பிஜேபி, அதிமுக மட்டுமே . உடனே நான் பிஜேபி னோ சங்கி னோ முடிவு பண்ணிராதீங்க. பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சொத்துக்கள் கட்சி பெயருல இருக்கு. அதை எவன்தான் அடுத்தவனுக்கு விட்டுத்தருவான். கட்சி ஆரம்பிச்சு நிறைய பணம் ரோட்டுல போறவன் வரவன் கிட்ட எல்லாம் நிதியா வாங்கி குவிச்சு தன்னுடைய நிலையை உயர்த்திக்கிட்டு காசு குடுத்த தொண்டனை ரோட்டுல நிக்கவெச்சி கடைசில அவனுக்கு அல்வா குடுத்துட்டு தன்னுடைய குடும்ப கட்சி ஆக்கி தன்னுடைய மகனையோ, மனைவியையோ மகளையோ தலைவர் ஆக்கி அப்படியே கட்சியையும், கட்சி சொத்துக்களையும் ஆட்டைய போடுறதுதான் நடக்கும். இன்னிக்கி இருக்குற திமுக, காங்கிரஸ் விசிக , நாதக பாமக மதிமுக எல்லா சில்லறை கட்சிகளும் இப்படித்தான். உண்மையிலேயே சோறு திங்குறவங்களா இருந்தா வெத்து தொண்டனா மட்டுமே இருக்கறவன்ல்லாம் கட்சியை தூக்கி வீசிட்டு வெளில வந்து நியாயமானவங்களுக்கு ஒட்டு போடுங்க பாக்கலாம். இல்லனா நீங்க திங்குறது.... ___


visu
டிச 28, 2024 16:37

பா மா கா வன்னியர் கட்சி என்ற பிம்பம் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டதிலேயே தெரிந்து விட்டது இந்தியாவில் எல்லா மாநிலகட்சிகளும் வாரிசு கட்சிகள்தான் இப்போ அவர் பதவி அளிப்பது தனது மகள் வழி பேரனுக்கு திமுக போல் இன்றி பெண்ணுக்கும் சம முக்கியத்துவம் தருகிறார்


V Gopalan
டிச 28, 2024 16:28

What was the purpose of princely states were abolished and now creating the same dynasty?


vadivelu
டிச 28, 2024 16:25

தனியாக ஒரு கொள்கையே இல்லாத இன்னொரு கட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை