உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராமேஸ்வரம்- - காசி: 602 பக்தர்கள் ஆன்மிக பயணம் 

 ராமேஸ்வரம்- - காசி: 602 பக்தர்கள் ஆன்மிக பயணம் 

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, அறநிலையத் துறை சார்பில் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும், 602 பேரை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 18 வகையான பொருட்களை வழங்கி, அமைச்சர் சேகர்பாபு வழியனுப்பி வைத்தார். அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கான ராமேஸ்வரம் - -காசி ஆன்மிக பயணம், 2022- - 23ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து, 602 பேர் காசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, அவர்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 18 வகையான பொருட்களை வழங்கி, வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில், அறநிலையத் துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் மங்கையர்கரசி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை