| ADDED : டிச 02, 2025 05:01 AM
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில், ஹிஜாவு என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 89,000 பேரிடம், 4,400 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது. இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். ஆனால், முக்கிய குற்றவாளிகளான, ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் அலெக்சாண்டர் மற்றும் அவரின் மனைவி மகாலட்சுமி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டனர். இவர்களை, 'இன்டர்போல்' எனும் சர்வதேச போலீசார் உதவியுடன் கைது செய்ய, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கப்பட்டு உள்ளது. 'ஹிஜாவு நிறுவனத்தின், 14.47 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. 90 கோடி ரூபாய் மதிப்புள்ள, 54 வகையான அசையா சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளன' என, போலீசார் தெரிவித்தனர்.