உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சேதமான சாலைகளை விரைவாக சீரமையுங்கள்: நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு கெடு

 சேதமான சாலைகளை விரைவாக சீரமையுங்கள்: நெடுஞ்சாலை, உள்ளாட்சி துறைகளுக்கு கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சேதமான சாலைகளை, ஜனவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும்' என, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு கெடு விதித்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை துறை பராமரிப்பில், 65,000 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, பல ஆயிரம் கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலை துறை சாலைகளை இணைக்கும் வகையில், இந்த சாலைகள் அமைந்துள்ளன. சென்னையில் மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள பல சாலைகளில், மெட்ரோ ரயில் கட்டுமானம், நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக மழைநீர் கால்வாய் கட்டுமானம், குடிநீர் வாரியம் வாயிலாக புதிய குழாய்கள் புதைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதனால், ஓராண்டுக்கு மேலாக அவை புதுப்பிக்கப்படாமல் சேதம் அடைந்து இருந்தன. இந்நிலையில், சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையிடம், 600 கோடி ரூபாயை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்கி உள்ளது. இதேபோல, அரசு ஒதுக்கியுள்ள நிதி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. அவற்றில், மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள், பயணியர், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், சேதமான சாலைகளை செப்பனிடும்படி, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழை காலம் முடிந்ததும், ஜனவரி மாதத்தில் சாலைகளை முழுமையாக புனரமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒரு வாரத்திற்குள் சாலையை செப்பனிடும் பணியை முடித்து, அதன் விபரங்களை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Selliah Ravichandran
டிச 08, 2025 11:10

Wist and worst people in Tamilnadu Yes next coming election.shameless,quarter Biriyani no any develop in tamilnadu.only increase wine shop only


N S
டிச 08, 2025 11:03

நரகங்கள் நகரங்களாக வேண்டும். "நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு கெடு விதித்துள்ளது." தன்னிகரில்லா தனி தலைவர் அப்பாவின் வழிகாட்டுதலில், தேர்தலுக்கு முன்பு கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும்.


V Venkatachalam, Chennai-87
டிச 08, 2025 08:07

நமக்கு ஓட்டு போடும் ஆதரவாளர்களையாவது நல்ல சாலையில் அழைத்து வரவேண்டுமே. அதுக்குதான்.வோட்டு போடும் நாளுக்கு முதல் நாள் ராத்திரிக்குள்ள ரெடி பண்ணிடுங்க. எம காதகன் டூப்ளிகேட் புலீஸு அண்ணாமலையை சமாளிக்க முடியல.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 08, 2025 07:15

நம்ம கட்சி காரனுக்கு காண்ட்ராக்ட் குடு துட்டு அள்ளு, எலெக்ஷன் செலகக்கு விடியல் சார் வாழ்க.


Vasan
டிச 08, 2025 06:48

Road is in extremely bad condition in the Sterling road - Gemini flyover stretch, due to ongoing Metro rail works. At this juncture, must appreciate the excellent work done much before the rains, in Nungambakkam Puspa Nagar, in the Tank Bunk road that connects Valluvar Kottam and Loyola College. No water stagnation due to recently done storm water work, and no damage to the newly laid road also. This can be taken a model road for others to emulate. People who worked in this project deserve appreciation.


Kasimani Baskaran
டிச 08, 2025 06:47

கார்த்திகை அன்று தீபத்தூணில் தீபமேற்றக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியதில் சாலைதரம் பற்றி மறந்து விட்டார்கள்.


raja
டிச 08, 2025 05:56

ஆமா சீக்கரமா முடிங்க... அப்போதான் கேடுகெட்ட இழி பிறவி இந்து விரோதி ரோடு ரோடா போயி பிச்சை எடுக்க முடியும்.....


Mani . V
டிச 08, 2025 05:24

ஆமாம், தேர்தல் நெருங்குகிறது. மக்களை ஏமாற்ற சீக்கிரம் பேட்ச் ஒர்க்கை முடியுங்கள். அது தரமான சாலை என்று மக்கள் ஏமாந்து நமக்கு ஓட்டுப் போடட்டும். நாம் வழக்கம் போல் சுருட்டி நாட்டை நிர்மூலம் ஆக்குவோம்.