உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.8 கோடி மென்பொருள் வீண்; கியூ.ஆர்., முறையில் டிக்கெட் பெற வசதி; செலவை ஏற்க துறைகள் தயக்கம்

ரூ.8 கோடி மென்பொருள் வீண்; கியூ.ஆர்., முறையில் டிக்கெட் பெற வசதி; செலவை ஏற்க துறைகள் தயக்கம்

சென்னை: சென்னை மாநகரில், பஸ், மெட்ரோ, ரயில் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட்டை, கியூ.ஆர்., குறியீடு முறையில் வழங்குவதில் ஏற்படும் கூடுதல் செலவை ஏற்பது யார் என, துறைகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தால், 8 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில், மாநகர பஸ், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு சேவைக்கும், ஒவ்வொரு விதமான கட்டணம் உள்ளதால், ஒருங்கிணைந்த வழிமுறையை ஏற்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது. இதனால், இந்த சேவைகளை பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இதை கருத்தில் வைத்து, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் வாயிலாக, ஒருங்கிணைந்த முறையில், பஸ், மெட்ரோ, ரயில் சேவைகளுக்கான, கியூ.ஆர்., குறியீடு வாயிலாக டிக்கெட் பெறும் முறையை உருவாக்கும் திட்டத்திற்கு, 2023 - 24ல், 15 கோடி ரூபாயை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒதுக்கியது. இதையடுத்து, கும்டா அதிகாரிகள், இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கினர். 'மூவிங் டெக் இன்னோவேஷன்'ஸ் என்ற நிறுவனம் வாயிலாக இதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில், பொதுமக்கள் மொபைல் போன் செயலியை பயன்படுத்தி, கியூ.ஆர்., குறியீடு முறையில் டிக்கெட் பெறலாம்.மென்பொருள் தயாரிப்பு முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருவதாகவும், ஆகஸ்ட் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

கூடுதல் செலவை யார் ஏற்பது?

இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பல்வேறு திட்டங்கள் குறித்து சமீபத்தில், தலைமை செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, கியூ.ஆர்., குறியீட்டு முறையில் டிக்கெட் வழங்குவதற்கான மொபைல் போன் செயலியை, அரசு மற்றும் தனியார் பங்கேற்பில் பராமரிக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. டிக்கெட் கட்டணத்துடன், 1.39 சதவீத தொகையை கூடுதலாக வசூலிக்க வலியுறுத்தப்பட்டது. வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கும், செயலியில் வரும் கட்டணத்துக்கும் வேறுபாடு இருந்தால் குழப்பம் ஏற்படும் என, மாநகர் போக்குவரத்து கழகம், மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே போன்றவை தெரிவித்தன. அதேநேரம், கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதை, நிதித்துறை ஏற்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில், தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கியூ.ஆர்., முறையில் டிக்கெட் வழங்குவதற்காக, 8 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சலுகை தரலாம்; சுமை கூடாது

நேரடியாக பணம் கொடுத்து வாங்கும் கட்டணத்திற்கும், ஒருங்கிணைந்த டிக்கெட் முறை கட்டணத்திற்கும் வேறுபாடு இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். தற்போது, மெட்ரோ ரயில் பயணியர், 'சிங்கார சென்னை' என்ற அட்டையை பயன்படுத்தும் போது கட்டணத்தில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதே அட்டையை பயன்படுத்தி கூடுதல் செலவின்றி, மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு பெற முடிகிறது. இந்தச் சூழலில், கியூ.ஆர்., டிக்கெட்டிற்கான மென்பொருள் சேவையை அமல்படுத்தும் போது, மக்களுக்கு சலுகை தரலாம்; கூடுதல் செலவும் ஏற்படக்கூடாது. இதில், ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.- நகரமைப்பு வல்லுநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sasikumaren
ஜூலை 21, 2025 17:42

மும்பையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் நாற்பது ரூபாய் கட்டணம் மட்டுமே வருகிறது ஆனால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறான்கள் இது என்ன நியாயம் என்றே தெரியவில்லை அதை முதலில் சரி செய்யுங்கள்


Ganesh
ஜூலை 20, 2025 20:52

இதுல என்ன சிரமம் இருக்கிறது? டிக்கெட் வருவாய் எப்படி இருக்கிறதோ அது பிரகாரம் செலவையும் பிரித்து கொள்ள வேண்டியது தான்.. இன்னும் புரியும் படி சொன்னால் மூன்று பேரும் செய்து ஊழல் செய்தால் எப்படி பங்கு பிரித்து கொள்கிறார்களோ அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் அது போல் தான்..


sekar narayana koti
ஜூலை 20, 2025 07:38

When the earning wage differences are so high it is imperative to provide the social support for the lowest levels in the strata people


Ethiraj
ஜூலை 20, 2025 06:37

All the three times food to all also you can demand we are not capable of earning


Jack
ஜூலை 19, 2025 08:28

வரும் தேர்தலை கருத்தில் கொண்டு அணைத்து சேவைகளையும் கட்டணமில்லா சேவைகளாக அறிவிக்கலாமே ... ந ரகேகா பான்ஸ் ...ந பஜேகி பாசுரி ....


Kasimani Baskaran
ஜூலை 19, 2025 07:58

அரசிடமே திறமையான எல்காட் நிறுவன ஊழியர்கள் இருக்கும் பொழுது எதற்கு தனியாரிடம் மென்பொருள் உருவாக்கும் வேலையை குத்தகைக்கு விடவேண்டும்? சிந்திக்கத்தெரியாத கூட்டம் இருந்தால் இப்படித்தான் ஆகும்.


crap
ஜூலை 19, 2025 08:17

இப்படி பச்சை புள்ளையாவா இருக்கிறது? அரசின் பல கோடி ரூபாய் டெண்டர் வெளியே செல்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் என்று அவர்களுடைய தொடர்புகள் என்னவென்று பாருங்கள்.


raja
ஜூலை 19, 2025 06:26

ஏல சின்னவனே இப்போ கேப்பியா இந்த எட்டு கோடி எவன் அப்பன் வீட்டு பணம்..


Subramanian
ஜூலை 19, 2025 06:23

It is strange that the departments are fighting it out and the CS is not able to resolve it. The additional cost can be shared by user departments in the proportion of the ticket sales each department does through this app. This facility will increase the ticket sales and the number of passengers will increase. So increase in collection will take care of the cost easily


சமீபத்திய செய்தி