உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

 சில வரலாற்று தவறுகளை சரி செய்யணும்: கிருஷ்ணசாமி திருப்பரங்குன்றம் விஷயத்தில் கிருஷ்ணசாமி கருத்து

மதுரை: “சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும்,” என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். மதுரையில் அவர் அளித்த பேட்டி: வழிபாட்டு விஷயங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒருமுறை பழனி சென்றபோது, 'தமிழகத்தில் கடவுள் என்றால் முருகனாக இருக்கலாம்' என கூறினார். அந்த வகையில், தமிழ் மண்ணோடும், உணர்வோடும் தொடர்புடையவர் முருக கடவுள். எனவே, திருப்பரங்குன்றம் மலை மீது, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசு, இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனிப்பட்ட முறையில் தீபம் ஏற்ற முயன்றால், தடுக்க போலீசாருக்கு உரிமையுண்டு. ஆனால், நீதிமன்ற உத்தரவுடன் சென்றவர்களை தடுத்துள்ளனர். அரசின் நிலைப்பாட்டால் போலீசாருக்கும், நீதிபதிக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. சில வரலாற்று தவறுகளை, ஏதாவது ஒரு நேரத்தில் சரி செய்ய வேண்டும். தீபத் துாணில் தீபம் ஏற்றுவதால், முஸ்லிம்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. திருப்பரங்குன்றம் விஷயத்தை, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழ் உணர்வோடு, இயற்கை வழிபாட்டு முறையாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை