உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

ராமர் பாலம் காண படகு சவாரி; மே 15ல் துவக்குகிறது இலங்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி - இலங்கை இடையே, கடலில் ராமர் அமைத்த பாலத்தைக் கண்டு தரிசிக்க, மே, 15ல் இலங்கை அரசு, சுற்றுலா படகு சவாரியை துவக்குகிறது.கடலில் பாலம் அமைத்து, சீதையை ராமர் மீட்டு வந்ததாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த, 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில், சுற்றுலா பயணியர் ராமர் பாலத்தைக் கண்டு ரசித்தும், தரிசித்தும் சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6a56yuj9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனுஷ்கோடி அரிச்சல்முனை - இலங்கை தலைமன்னார் இடையே, 29 கி.மீ., உள்ள கடல் பகுதியில், ராமர் பாலம் மீது, 14 முதல் 18 மணல் தீடைகள் உள்ளன. அரிச்சல் முனையில் இருந்து, 5 முதல் 6 தீடையுடன் இந்திய எல்லை முடிந்து விடும். மீதமுள்ள தீடைகள் இலங்கை வசம் உள்ளன.ராமர் பாலத்திற்கு படகு இயக்க, இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா, பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், மே, 15 முதல் தலைமன்னாரில் இருந்து சுற்றுலா படகு சவாரி துவக்க முடிவு செய்தனர். இதன் வாயிலாக, உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணியரையும் கவர்ந்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Apposthalan samlin
ஏப் 24, 2025 12:33

சவூதி அரேபியா பக்ரைன் இடையே கடல் தான் உள்ளது 35 km என்று நினைக்கிறன் இங்கு பாலம் உள்ளது ஏன் ஸ்ரீலங்கா ராமேஸ்வரம் இடையில் ரெண்டு country சேர்ந்து பாலம் அமைக்க கூடாது .தரை பாலம் ரயில் பாலம் ரெண்டும் அமைக்கலாம் .


Rasheel
ஏப் 24, 2025 12:30

ராமாயணம் கட்டுக்கதை என்று சொல்கின்ற ஈன பிறவிகள் குருட்டு கண் திறக்க வேண்டும். பௌத்த சமயத்தை பின்பற்றும் சிங்களன் ராமாயணத்தை போற்றுகிறான். பிழைக்க திறந்தவன். தமிழன் பொய் என்று சொல்லி தன் வாயில் மண்ணை போட்டு கொள்கிறான்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 24, 2025 11:34

இராமர் பாலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. அது பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்று சொல்லி அந்த இடத்தில் பெருங்காயம் கரைத்த வெங்காய சீடர்களின் உருட்டும் புரட்டும் இன்று புஸ்வாணமா போச்சே அப்படி புரட்டித்தானே நம்ம பா பா பாலு அய்யா கப்பல் எல்லாம் வாங்கி மிதக்க ஆரம்பிச்சாரு


Murugan Guruswamy
ஏப் 24, 2025 09:07

ராமாயணம் என்பது கற்பனை கதை, ராமர் பாலம் என்பது கட்டு கதை. நேரு டிஸ்கோவேரி ஒப்பி இந்தியா படித்தால் தெரியும்


Amar Akbar Antony
ஏப் 24, 2025 07:09

ராமர் பாலம்? அது ஏதோ பவளப்பாறை அதனாலே கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும் அதனால் அது உடைத்து தன்னுடைய அல்லது தன் கூட்டணியில் கப்பல் விடும் அதிபர்களுக்கு ஆதரவாக தீய மு க வின் பாலு அதற்க்கு ஆதரவாக மறைந்த ஆனால் அன்றைய முதல்வர் தீய மு க வும் கான் கிரேஸ் அறிவாளிகளும் ராமர் பாலம் என்பது கற்பனை என்றெல்லாம் சுய லாபத்திற்காக கொஞ்சம் விரயம் செய்தார்களே அரசின் செலவில். அடேய் உறுபடமாடீங்கடா மன நிம்மதியில்லாமல் வாழ்க்கை ஓடும்.


sri
ஏப் 24, 2025 06:43

இதன் மூலம் இலங்கை அரசு பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டும். இதுபோன்ற சந்தர்பங்களை தவறவிட்டு, ஸ்டாலின் தமிழகம் பெரியார் மண், என்று பேசுவார்


Apposthalan samlin
ஏப் 24, 2025 12:43

சேது சமுத்திர திட்டத்தை உடைத்த பெருமை சுப்ரமணிய சாமியே சாரும் வெட்கம் கெட்டவர்கள் பேச கூடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை