உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய நிதி அமைச்சருடன் தமிழக பா.ஜ., செயலர் சந்திப்பு

மத்திய நிதி அமைச்சருடன் தமிழக பா.ஜ., செயலர் சந்திப்பு

புதுடில்லி: டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது இல்லத்தில் தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வங்கிக் கடன் தொடர்பாக, கிராமப்புற மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இருக்கும் பிரச்னைகளையும் தீர்க்க வலியுறுத்தி, மனு கொடுத்தார். குறிப்பாக, 'விவசாய உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய கடனுக்காக, நிறுவனங்களில் தலைவர்களாக இருக்கும் விவசாயிகள் மீது வங்கிகள் செக் மோசடி வழக்குத் தொடர்ந்து, விவசாயிகளை துன்புறுத்துகின்றன. நிறுவனம் வாங்கியக் கடனுக்கு, தலைவரை தொந்தரவு செய்வதை தடுக்க வேண்டும்' என்றும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் உதவுகிறேன்' என கூறியுள்ளார். டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்த தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை