உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கும்பகோணத்தில் தமிழக பா.ஜ., அணிகள் மாநாடு

கும்பகோணத்தில் தமிழக பா.ஜ., அணிகள் மாநாடு

சென்னை: தமிழக பா.ஜ.,வில் வழக்கறிஞர், மருத்துவர், கல்வியாளர், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு உட்பட, 25 அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிக்கும், கடந்த செப்., 9ம் தேதி மாநில அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, அந்த பிரிவுகளில் மாநில இணை அமைப்பாளர்கள், மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாடு, வரும் 29ம் தேதி, தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடக்க உள்ளதாக, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந் திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை