உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது. பின்னர், சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. தவெக தரப்பு சுப்ரீம்கோர்ட்டினை அணுகி, சிபிஐ விசாரணை நடத்த கோரியிருந்தது. பின்னர் சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.தற்போது சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.மனுவில் தமிழக அரசு கூறியிருப்பதாவது: கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும்.அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RK
டிச 02, 2025 13:35

திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பயம் வந்துவிட்டது. கடைசியாக ஒரு முயற்சி சட்ட போராட்டம்!!! யார் விசாரணை செய்தால் என்ன தமிழக விடியல் அரசு ஏன் பயப்பட வேண்டும். ???


vadivelu
டிச 02, 2025 13:31

ஒரு மனு உச்ச நீதிமன்றம் தேவை இல்லை, மாநில நீதிமன்றங்களே போதும் என்று கூட வரலாம்.


SUBRAMANIAN P
டிச 02, 2025 13:16

சம்பவம் நடந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது.. இவனுவோ இன்னமும் சி பி ஐ விசாரணையை எதிர்த்து மனு போட்டுக்கிட்டு இருக்கானுவோ. இதையும் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து இழுத்து அடிக்கும்.. நாடு விளங்கும்.. எல்லாரும் அப்படியே நாசமா போங்க.. அடுத்து இந்த கட்-அவுட்டு விஜய்க்கு ஓட்டுபோடத்தான் நிறைய கூமுட்டைகள் காத்துக்கிட்டு இருக்கு.


Kalyan Singapore
டிச 02, 2025 13:07

தமிழகத்திற்காக உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் யார் யார் ? கபில் சிபல் அபிஷேக் மனு சிங்கவி போன்ற ஒரு தோற்றத்துக்கு appearence 30 லட்சம் பெறும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா ? எவன் வீட்டு சொத்து ?


திகழ்ஓவியன்
டிச 02, 2025 12:59

தற்குறிக்கு அவர்கள் ரசிகர் தான் வோட்டு போடுவார்கள், நடுநிலையாளர் ஒருத்தர் போட வாய்ப்பிலை என்று ஒரு சர்வே தெரிவிக்கிறது, வெளியேவே வரமாட்டார், நிகழ்ந்த சோகத்திற்கு மன்னிப்பு கேட்க வில்லை பொறுப்பு கூட ஏற்கவில்லை இப்படி பட்டவரை எப்படி நம்புவது என்று நடுநிலையான வாக்காளர் யோசிப்பார்கள்


S Srinivasan
டிச 02, 2025 12:59

why this?? we lost 41 life for this?? vijay to answer this


ஆரூர் ரங்
டிச 02, 2025 12:58

வீண் வழக்கு அப்பீல் என வரிப்பணத்தை வீணடித்து விட்டு பிறகு த‌மிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் வஞ்சித்து வருகிறது என புலம்புகின்றனர்.


திகழ்ஓவியன்
டிச 02, 2025 12:56

41 பேர் இறக்க காரணம் தான் தான் என்று ஒரு மனச்சாட்சி உறுத்தாத, மக்களிடம் மன்னிப்பு கேட்காத ஒரே தற்குறி தலைமை தற்குறி விஜய் தான்


திகழ்ஓவியன்
டிச 02, 2025 12:55

உலகுக்கே தெரிந்த விஷயம், 12 மணிக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு 8 மணி நேரம் டிலேவாக வந்து சோறு தண்ணீர் கொடுக்காம மூச்சு திணறி 41 பேர் இறக்க யார் காரணம், 25 ஆம் தேதி விண்ணப்பித்து 26 ஆம் தேதி approval கொடுக்க இவ்வளவு எல்லாம் செய்த தற்குறி கூட்டம், என்னவோ எல்லாம் அரசு மீது தான் என்று சொல்லி எஸ்கேப் ஆன கோழை கூட்டம் தான் தற்குறி கூட்டம்


chennai sivakumar
டிச 02, 2025 12:42

மடியில் கனம் இல்லை என்றால் எதற்கு பதற வேண்டும்??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை