வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நாங்கள் விளைவிக்கும் பருத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற கோரிக்கை பருத்தி விவசாயிகளின் நிரந்தரகோரிக்கையாக இருந்து வருகிறது. அரசால் ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் MSP மிகவும் குறைவாகவே இடைத்தரகர்களாலும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களிலும் வாங்கப்படுகின்றன . குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் குறைந்த விலைக்கு பருத்தி சந்தை விலை குறையும் போது காட்டன் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா CCI குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு வாங்கவேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை. ஜவுளித்துறை நிறுவனங்கள், " முதிர்ந்த சுத்தமான பருத்தி க்கு நாங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலையைக்காட்டிலும் அதிக விலைக்கு வாங்குகிறோம். ஆனால் முதிர்ச்சியடையாத ஈரப்பஞ்சுகள் மற்றும் சுத்த மில்லாத பஞ்சுகள் தரமான நூல் நூற்றிட முடியாது .அவைகளே குறைந்த விலைக்கு வாங்கப்படுகின்றன" என்று சொல்கிறார்கள் .பருத்தி எடுக்க ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கிலோ கணக்கில் சம்பளம் தரவேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர் . முதிராத பஞ்சுகளே எடை அதிகம் நிற்கும் என்பதாலேயே விவசாய தொழிலாளர்களும் அப்படிப்பட்ட முழுதும் முதிர்ச்சியடையாத பஞ்சுகளை எடுக்கின்றனர் . நல்ல தரமான பஞ்சுகளை எடுக்க சற்று கூடுதல் சிலவானாலும் அறுவடை செய்யவேண்டும் . பருத்தி கொள்முதல் செய்வோரும் நல்ல தரமான பஞ்சுகளுக்கு மதிப்பளித்து நல்ல விலை தர வேண்டும் .அரசாங்கம் நிர்ணயத்திருப்பது குறைந்த பட்ச ஆதரவு விலை .அதிக பட்ச விலை கிடையாது . எனவே தரத்திற்கேற்ற விலை கொடுத்தால்தான் பருத்தி துறையினருக்கு உலக தரமான பருத்தி கிடைக்கும் . எப்படி பருத்தி ஆடைகளுக்கு பிரீமியம் விலை நிர்ணயிக்கிறார்களோ அதேபோல நல்ல பருத்திக்கும் விலை கிட்டவேண்டும் என்பதே சரியான தீர்வாகும் .
சுதந்திரம் வாங்கி முக்கால் நூற்றாண்டு ஆனாலும் கூட அரசு கொள்முதல் செய்யும் நெல் பருத்தி போன்றவற்றை சேமிக்க உருப்படியான கிட்டங்கிகள் கூட கிடையாது. ஆனால் உலகில் நீளமான இயற்க்கை கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரை முழுக்க பல்லாயிரம் கோடி பெருமானை நிலங்களை ஆக்கிரமித்து திராவிட கல்லறைகள் அமைத்துள்ளார்கள். இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனால் முகதான் இந்திய சுதந்திரம் வாங்க கடுமையாக பாம்புகளுக்கு பள்ளிகளுக்கும் இடையில் படுத்து கடுமையாக போராடினார் என்று பாடத்திட்டத்தில் பதிவிட்டிருப்பார்கள். பின் குறிப்பாக ராமாசாமி ஒரு துண்டு நன்கொடையாக கொடுத்தார் என்பதையும் மறக்காமல் பதிவிட்டு இருப்பார்கள் ...
எனது தோழர் ஒருவர் போன் செய்து அவர் எங்கு பள்ளிகளுக்கு இடையில் படுத்து தூங்கினார் என்று கேள்வி கேட்டு அவரது கண்டனத்தையும் கூட பதிவு செய்தார்...