உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு; வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை

மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு; வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு நடைபெறும். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்'' என அக்கட்சி தலைவரும், நடிருமான விஜய் தெரிவித்துள்ளார்.மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க., 2வது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. வாகன பார்க்கிங்க்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடத்துவதற்காக இன்று (ஜூலை 16) பந்தகால் நடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yq7beml3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.தற்போது, மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி. இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.தென் மாவட்டங்களில் பலத்தை நிரூபிக்க விஜய் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். மதுரையில் முதல்வர் ரோடுஷோ தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஹிந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு என மதுரையில் தொடர்ச்சியாக அனைத்து கட்சியினரும் விழா நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் மாநாடு நடத்த உள்ளார். மதுரையை குறிவைத்து அனைத்துக் கட்சியும் மாநாடு நடத்தப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி வருகிறது.கடந்தாண்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் த.வெ.க.,வின் முதல் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 16, 2025 12:59

விஜய்யைப் பொறுத்தவரை அவருக்கு முதலமைச்சர் ஆகணும் என்கிற ஆசையோ, எதிர்பார்ப்போ இல்லை .... விஜய்யின் உயரம் விஜய்க்கு நல்லாவே தெரியும் ..... ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்கணும் விஜய்யின் ஆசை .... திமுகவின் எதிர்ப்பு வாக்குகளில் கணிசமான அளவுக்கு டிவிகே வுக்கும் உழுந்தா அதிமுக+பாஜக அம்போ ..... டிவிகே வும் அம்போ ..... திமுகவுக்கு ஓஹோ ....


saravan
ஜூலை 16, 2025 11:02

இது ஒரு மாநிலம் இனி ஊதாடிகளுக்கு இடமில்லை


Jack
ஜூலை 16, 2025 11:20

ஊதாடி....


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 16, 2025 10:52

அட என்னய்யா, எல்லா கட்சிக்காரங்களும் மதுரையிலேயே மாநாடு நடுத்துறங்கேய? அட மக்க, மானம் என்றால் என்ன என்கிற பயலுக புறம் மதுரை யை சுத்தி இருகாங்கேய ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை