உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சி முடிய கவுன்டவுன் துவக்கம்

தி.மு.க., ஆட்சி முடிய கவுன்டவுன் துவக்கம்

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின், 1040வது சதய விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் உள்ள சிலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். பின், பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி: தஞ்சாவூர் பெரியகோவிலின் உள்ளே, ராஜராஜ சோழன் சிலை அமைப்பது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வோம். தி.மு.க., அரசு, நெல் கொள்முதலில் தாமதம் செய்வதால், நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, முளைத்து வீணாகி வருகிறது. ஆனால், இது பற்றி கவலைப்படாமல் முதல்வரும், துணை முதல்வரும் சினிமா பார்க்கின்றனர். தி.மு.க., ஆட்சி முடிய, இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன. அதற்கான கவுன்டவுன் துவங்கி விட்டது. கோவில் நகரான கும்பகோணத்தில், ஏராளமான கோவில் கோபுரங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. தமிழகத்தில், மொழி வாரியாக பிரித்து பேசி, வன்மத்தை வெளிப்படுத்துவதை, கருணாநிதி காலத்தில் இருந்தே தொடர்ந்து செய்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தில், பொறியாளர் நியமனத்தில் 838 கோடி ரூபாய்க்கும் மேல், ஊழல் நடந்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

T.sthivinayagam
நவ 02, 2025 22:39

திமுக ஆட்சியை முடித்து விட்டு குஜராத் தலைவர்கள் ஆசைப்படி முதல்வர் துணை முதல்வருக்கு டெண்டர் விட்டு தேர்ந்து எடுத்து வைத்து கொள்ள வேண்டியதுதான்.


Arul. K
நவ 02, 2025 12:52

ஆ தி மு க ஆட்சி அமைக்க இத்தனை நாள் உள்ளது என்று சொல்லவேண்டியது தானே


Dhinesh
நவ 02, 2025 11:55

வாய்ப்பில்லை ராசா......


r ravichandran
நவ 02, 2025 02:18

திமுக கவுண்ட்டவுன் ஆக பிஜேபி கட்சி தலைவர் மற்றும் கட்சி என்ன செய்தது? கட்சி இப்போது கோமா நிலையில் இருப்பது போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை