உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் இதுதான்!

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவக்கம்: முதல்வர் ஸ்டாலின் சொன்ன சஸ்பென்ஸ் இதுதான்!

சென்னை: இன்று (ஜன.,23) சஸ்பென்ஸ் வரும் எனக் கூறிய நிலையில், 'தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.,23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இந்த விழாவில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டு கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும் வரை கேட்டு கொண்டு இருந்தார்கள். தமிழர்களின் தொன்மையை விளக்கும் வகையில் உலகிற்கு ஒரு மாபெரும் பயணத்தை அறிவிக்க போகிறேன்.இங்கு கூடியிருப்பவர்களும், விழாவை நேரடியாக பார்த்து கொண்டிருப்பவர்களும் கவனமாக கேளுங்க. தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது என்று இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே மறுபடியும் சொல்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகமானது.நம்மை கற்பனைவாதிகள் என்று சொன்னவர்கள் எல்லாம் வாயடைத்துள்ளனர். தமிழ் பண்பாட்டை உலகிற்கு சொல்லும் விழாவாக இது அமைந்துள்ளது. ஐம்பெரும் விழாவாக இந்த விழாவை நடத்தி வருகிறோம். பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. இரும்பு தாதுவிலிருந்து இரும்பை பிரிக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் தான் தொடங்கியது இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு என நாம் இதுவரை சொல்லி வந்தவை இலக்கியப் புனைவுகள் அல்ல; வரலாற்று பெருமைகள். தமிழகத்தில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு., 6 நூற்றாண்டில் தொடங்கியது. பழம் பெருமை பேசுவது புதிய சாதனையை படைக்க ஊக்கமாக அமைய வேண்டும். இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். நமது பெருமைகளை நமது எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். தமிழகத்தின் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழக சட்டசபையின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 195 )

Bhakt
பிப் 20, 2025 23:11

அப்போ இது பெரியார் மண்ணு இல்லையா?.


sugumar s
பிப் 20, 2025 16:15

MK ancestors only found out world. DM has proof


பெரிய குத்தூசி
பிப் 18, 2025 19:33

பண்டைய எகிப்து & மெசபடோமியா கிமு 3200 இல் கருவிகள் மற்றும் ஆபரணங்களுக்கு இரும்பைப் பயன்படுத்தின என்பது வரலாறு. .பொய்யை மூலதனமாக வைத்து ஆட்சி செய்யும் திமுக 3200 லிருந்து ஒரு 2100 சேது 5300 சொல்லி புளுகி தள்ளுது. காசா பணமா, அடிச்சிவிடு தமிழ்நாட்டின் தலிபான் ராசா.


Dharmavaan
பிப் 15, 2025 09:49

இரும்பு தாது பிரிக்கும் தொழில் நுட்பம் தெரிந்ததற்கு ஆதாரம் என்ன இவர் சொல்ல வேண்டும்.


S.V.Srinivasan
பிப் 11, 2025 07:16

என்னவோ இவரு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்ச மாதிரி உதார் விட்றாரு. சுய விளம்பரத்துக்கு ஒரு அளவே இல்லையா??


Sivasankaran Kannan
ஜன 30, 2025 14:58

மங்குனி திராவிட models.. உலகம் முழுக்க DeepSeek , ChatGPT , AI என்று பேசி கொண்டிருக்க முதல் இரும்பு, இரண்டாவது ... என்று எவ்வளவு காலம் எங்கள் காதில், மூக்கில் பூ வைத்து அழகு பாப்பிங்க.. எங்கள் மக்களை உருப்பட விடுங்கள்..


SRITHAR MADHAVAN
ஜன 30, 2025 14:29

இனி திராவிட நிலத்திற்கு பதிலாக இரும்பு நிலம்


Narayanan
ஜன 30, 2025 12:55

தமிழ், தமிழ்நாடு, தமிழ் மண்ணில் இருந்துதான் இரும்பின் காலம் துவங்கி இருக்கிறது. ஆகவே இனியாவது முதல்வர் திராவிடம் , பெரியார் மண் என்பதை உச்சரிக்காமல் இருக்கவும்


Matt P
ஜன 29, 2025 03:11

அமெரிக்காவில் நடந்து போகும்போது சில சாக்கடை மூடிகளை பார்த்தேன். அதில் made in India என்று எழுதியிருந்தது. அதிலும் ஆண்டு 1950 என்று எழுதப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியப்பட்டேன்.


Matt P
ஜன 29, 2025 03:07

திருட்டு முன்னேற்ற கழகம் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் வூழலே தொடங்கியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை