உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டம்

கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது'' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் தெரிவித்தார்.சென்னையில் இன்று (ஜூன் 11) நிருபர்கள் சந்திப்பில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம் கூறியதாவது: நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளை வைத்து கொண்டு ஓட்டு சதவீதம் இப்படி தான் இருக்கிறது என்று சொல்லக் கூடாது. பா.ஜ., அ.தி.மு.க., ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்படுத்தி கொண்டு, அந்த கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் அந்த கட்சி தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i13neigi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆகவே அந்த கூட்டணியை தோற்கடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்கும் வலிமை இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தலைமையிலான அணிக்கு தான் இருக்கிறது. ஆகவே தி.மு.க., தலைமையிலான கூட்டணி சார்பில் தான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானம். அதற்கு ஏற்ப எங்கள் அரசியல் அணுகுமுறை இருக்கும். அதே நேரத்தில், 2026ம் ஆண்டு தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் சட்டசபைக்கு கட்சி உறுப்பினர்கள் செல்ல வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்து இருக்கும் தீர்மானம் எவ்வளவு முக்கியமோ? அதே அளவுக்கு, மார்க்சிஸ்ட் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2025 21:16

சரி ,ஏழு தொகுதி கொடுக்க அப்பா ரெடி. ஆனால், நீங்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கவேண்டும் , சம்மதம் தானே


Srinivasan Krishnamoorthi
ஜூன் 11, 2025 19:57

எல்லாம் நன்மைக்கே


தாமரை மலர்கிறது
ஜூன் 11, 2025 18:48

நீங்க கேளுங்க. இன்னும் அதிகமாக கேளுங்க. கேட்டால்தான் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளை விரட்டிவிட வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை கொண்ட உங்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது பத்து ஓட்டுகள் இருக்கு. தைரியமாக கேளுங்க. உங்க திறமைக்கு ஐம்பது சீட்கள் கூட கேட்கலாம்.


Keshavan.J
ஜூன் 11, 2025 17:35

அப்பா அவர்களே , உங்கள் அடிமை எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். சர்வாதிய மாறி ரெண்டு ஆடி போடுங்க


Suppan
ஜூன் 11, 2025 16:14

இந்த கம்யூனிஸ்ட் கட்சி இனிமேல் எதற்கும் லாயக்கில்லை. அநேகமாக சில ஆண்டுகளில் அழிந்து விடும். நாட்டுக்கு நல்லது


Thravisham
ஜூன் 11, 2025 15:21

இப்பவே பாதி தொழிற்சாலைகள் வெல்வேறு மாநிலங்களுக்கு பறந்து கொண்டிருக்கின்றன. த்ரவிஷன்கள் ஆட்சியில் கமிஷன்/கரப்ஷன்/கலக்ஷன் இருப்பதால் எந்த புதிய தொழில்களும் தொழிற்சாலைகளும் வரவில்லை. இதில் உண்டிக்குலுக்கிகளை விட்டால் இன்னொரு மேற்கு வங்கம் செஞ்சிடுவானுங்க.


சிவம்
ஜூன் 11, 2025 15:14

கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்ன என்பது தமிழக கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பலருக்கே தெரியாது. நீங்கள் திமுக சின்னத்தில் தேர்தலில் நின்றாலாவது சின்னத்தை பார்த்து சிலர் ஓட்டு போடுவார்கள். இல்லையென்றால் நோடாவிற்கும் கீழ்தான் உங்கள் வாக்கு. உங்கள் சின்னத்தில் நீங்கள் நிற்பதும் திமுக உங்களை கூட்டணியில் இருந்து விலக்குவதும் ஒன்றுதான்.


Anbuselvan
ஜூன் 11, 2025 14:18

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வலது கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக காட்சிகள் விஜயை மற்றும் சீமான் கட்சிகளுடன் சேர்ந்து போட்டி இட்டால் அடுத்த வருடம் தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டாட்சிதான். தனித்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் இது வெறும் வாய் சவடாள் தான் என அனைவருக்கும் தெரியும்.


Sundar R
ஜூன் 11, 2025 13:57

கம்யூனிஸ்ட்களின் அடிப்படை லட்சணமே, திமுக எதிர்ப்பு தான். 1967-ல் இதே கம்யூனிஸ்ட்கள், திமுகவோடு சேர்ந்து காமராஜர் அவர்களை தோற்கடித்தார்கள். அது ஒரு பெரிய தவறு என்பதை வெகு சீக்கிரத்தில் உணர்ந்து விட்டார்கள். அதன் பிறகு திமுகவின் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு இதர கட்சியினர்களுடன் கூட்டணி வைத்து ஏராளமான தேர்தல்களை சந்தித்தார்கள். அந்த காலத்தில், தீக்கதிர் பேப்பரில் கருணாநிதியின் மீது கம்யூனிஸ்ட்கள் போடும் பவுன்சர்கள், துக்ளக், தினமலர் பத்திரிகைகளோடு போட்டி போடும் அளவுக்கு தரமானதாக இருக்கும். தீக்கதிர் நிருபர்களோடு நேர்காணல் என்றால், அந்த காலத்தில் கருணாநிதி அஞ்சுவார். ஏடாகோடமாக ஏதாவது கேள்வி கேட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம். 1967 முதல் 2014 வரை 47 வருட காலத்திற்கு நேர்மையான கம்யூனிஸ்ட்கள் திமுக பக்கம் மழைக்கு கூட ஒதுங்கவில்லை. திமுகவுடன் கூட்டணி வைப்பதை பெரும்பாவம் செய்வது போல் கருதினார்கள். 2014-ல் அதிமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் பிரிந்தார்கள். 2014 பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா ஒரு கூட்டணியும் வைக்காமல், தனியாக நின்று 39-க்கு 37-ல் வெற்றி பெற்றார். அந்த வெற்றியால், வெகுஜன மக்களாலும், மீடியாக்களாலும் பாரதம் மற்றும் அகிலம் முழுவதும் ஜெயலலிதா அவர்கள் பாராட்டு பெற்றார். ஜெயலலிதா தேர்தலில் தனியாக நின்ற காரணத்தால், 2014-ல் கம்யூனிஸ்ட்கள் திமுகவோடு கூட்டணி வைத்தார்கள்.கருணாநிதியோடு கூட்டணி வைத்ததால் படுதோல்வி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மீண்டும் திமுகவோடு கூட்டணி வைப்பதை அடியோடு தவிர்த்தார்கள். பிறகு, மிகவும் துரதிர்ஷ்டவசமாக 2021-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. "ஜீரா உஷார், ஜீரா உஷார்" என்று சப்தமாக தமிழகத்தில் உள்ள நல்லவர்கள் எல்லோரும் தமிழக மக்களை உஷார் படுத்தினார்கள். ஜீ. ராமகிருஷ்ணன் தனது கம்யூனிஸ்ட் சகாக்களுடன் அறிவல்லாத்த ஆலயத்தினுள் சென்று 2021 சட்டசபை தேர்தலுக்கு தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத தெலுங்கு கட்சியான தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவுடன் கூட்டணி அமைத்து பெருந்தவற்றை செய்து விட்டார். தமிழக மக்களை டாஸ்மாக் மூலம் தள்ளாட வைத்து விட்டார். அன்று முதல் இன்றுவரை கம்யூனிஸ்ட்கள் அறிவல்லாத்த ஆலய வாசலில் எலும்புத் துண்டுகளுக்கும், ரொட்டி துண்டுகளுக்கும் காத்திருந்து, காத்திருந்து காலங்களை ஓட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட்களில் 80% ஊழியர்கள் ஹிந்துக்கள். ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் கூட தங்களை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதை விரும்பவில்லை. ஹிந்து ஊழியர்களுக்காக கம்யூனிஸ்ட்கள் ஒரு புல்லைத் கூட புடுங்கி போட்டதில்லை. பிறகு, 2024 பாராளுமன்ற தேர்தலிலும் ஹிந்து ஊழியர்களை கம்யூனிஸ்ட்கள் ஏமாற்றி விட்டு, அபாயகரமான, தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத, கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவுடன் கூட்டணியை தொடர்ந்து விட்டார்கள். கம்யூனிஸ்ட்கள் தவறு செய்தால், அவர்களை கேட்பதற்கு யாரும் இல்லை என்று அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டார்கள். வக்ஃப் வாரியத்திற்கு 80% ஊழியர்களை மறந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்கள் ஓட்டு போட்டார்கள். திருப்பரங்குன்றம் முருகர் மலை விஷயத்தில் 80% ஊழியர்களிடம் ஒன்றும் பேசாமல், முஸ்லிம்களுக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்திற்குச் சென்று கருத்து கூறுகிறார்கள். மதுரை எம்பி சு வெங்கடேசன் என்பவர் ஒரு முஸ்லிம் என்பது எங்களுக்கு அன்றுதான், அவர் பேசியதை வைத்து தெரியும். கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சியான திமுகவுடன் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் திமுகவை 2026 அசெம்பிளி தேர்தலுக்கு முன்பாகவே தகனம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 தேர்தலுக்கு கம்யூனிஸ்டுகள் திமுகவுடன் கூட்டணியை தொடர்ந்தால், அதன் ஊழல் பழிகளை ஏற்க வேண்டிவரும். திமுக மீண்டும் தலைதூக்கினால், கம்யூனிஸ்டுகளை சுவரொட்டி ஒட்ட விடமாட்டான். கொடிக்கம்பம் நடுவதற்கு விட மாட்டான். பேனர் வைக்க விட மாட்டான். இந்த உபத்திரவங்களை எல்லாம் தவிர்க்க, கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல திருமாவளவனின் பின்னால் சென்று, அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வது தான் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லது.


vadivelu
ஜூன் 11, 2025 13:56

தனித்து இன்று ஆட்சி அமையுங்கள்


சமீபத்திய செய்தி