உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகம் குறித்து திமுக பேசுவதுதான் தான் வேடிக்கை; முதல்வருக்கு அண்ணாமலை பதில்

ஜனநாயகம் குறித்து திமுக பேசுவதுதான் தான் வேடிக்கை; முதல்வருக்கு அண்ணாமலை பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருமங்கலம் பார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலின், ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாகக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை பாஜ தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.முதல்வர் ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்; ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக, அவரை போனில் தொடர்பு கொண்டு, 'வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ஓட்டுக்களை திருடி வென்றீர்களா?' என்று கேட்கலாம். ஓட்டுக்கள் திருடப்பட்டதாக அவர் சொல்லும் மகாரேவபுரா தொகுதியில் ஒருமுறை, இரு முறை அல்ல, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் பொய்களை சொல்லி, பிறகு உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வது மற்றும் கொஞ்சம் கூட மானமின்றி சுற்றித் திரிவது என்பதையே ராகுல் கொள்கையாக கொண்டுள்ளார். அப்படிப்பட்டவருக்கு ஆதரவாக வருபவர், பொய்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர். மோசமான கூட்டணி. ஓட்டுத் திருட்டுக்கு மிகவும் பிரபலமான திமுகவின் திருமங்கலம் பார்முலா. அதேபோல, பிரசாரம் முழுதும் வாக்காளர்களை கால்நடைகளைப் போல அடைத்து வைத்து, இறுதியில் அவர்களுக்கு கொலுசு, பாத்திரங்கள், குக்கர் உள்ளிட்டவை கொடுத்தது தான் திமுகவின் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பார்முலா. இப்படியிருக்கையில், தற்போது ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை. இந்த வெற்று நாடகங்களுக்கு பதிலாக, முதல்வர் ஸ்டாலின் அவரது சகோதரர் ராகுலை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ravi
ஆக 12, 2025 06:52

கேடி ராகவனுக்கு பதவி கொடுத்ததை பற்றி ஏன் பேசல அண்ணா


M Ramachandran
ஆக 11, 2025 21:59

அப்போது அவர்களுக்கு பண நாயகம் பற்றி தான்தெரியும். ஜன நாயகத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல வாறீங்களா?


S. Venugopal
ஆக 11, 2025 19:25

நமது நாட்டில் எந்தக்கட்சியும் அவர்களது கட்சியின் உள்கட்சித் தேர்தல்களை கூட ஜனநாயக முறையில் நடத்துவது என்பது கிடையாது ....... அப்படியிருக்க ............ ஜனநாயகம் பற்றி பேசுவது காதில் ஈயத்தினை காய்ச்சி ஊற்றுவது போல் உள்ளது


Mario
ஆக 11, 2025 18:58

அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


vivek
ஆக 12, 2025 03:28

அதெல்லாம் சரி மரியோ...முதலில் நல்ல மனநல மருத்துவரை பார்து சிகிச்சை எடுத்து கொள்


என்றும் இந்தியன்
ஆக 11, 2025 17:59

இவனுங்க பேசுறது எப்போதும் இப்படித்தானே நீ தப்பு நீ தப்பு நீ தப்பு ஏன்று. முதலில் உன் தப்பை நீ அறிவாய் அதனிலிருந்து திருந்துவாய் அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் தவறு செய்பவர்களுக்கு என்ன சொல்றது சரியானது.


P. SRINIVASAN
ஆக 11, 2025 16:54

நீங்க பேசுறது வேடிக்கையாய் இருக்கு அண்ணாமலை


மூர்க்கன்
ஆக 11, 2025 17:25

ஆடும் சர்க்கஸ் கோமாளி??


vivek
ஆக 11, 2025 17:34

சீனு , நீ சரியான காமெடி பிசு பா கரெக்டா.....


Madras Madra
ஆக 11, 2025 16:28

ரூபாய்க்கு 2 படி அரிசி நிலமில்லா விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் மாசத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மானியத்தில் எரி வாயு இப்படி பரம்பரையாக திமுக பொய் வாக்குறுதி கொடுத்து வென்று ஒன்றையும் நிறைவேற்றாமல் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி விட்டு இப்போ ஜனநாயகத்தை காப்பாற்ற அட்டை கத்தியுடன் கெளம்பி விட்டார் தளபதி தில்லி சுல்தான் துக்ளக்கிற்கு


Rameshmoorthy
ஆக 11, 2025 15:00

Both Rahul and Stalin are shameless guys, corrupt DMK has no locus standi to talk about election commission


பாமரன்
ஆக 11, 2025 14:53

மார்கெட்டிங் மார்கெட்டிங்...


vivek
ஆக 11, 2025 15:29

ஜால்ரா ஜால்ரா. ஒரு இருநூறு ரூபாய்க்கு அடிக்கும் ஜால்ரா....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 11, 2025 17:28

2G.....2G /// Tasmac......Tasmac /// 10 Rs.....10 Rs /// கனிமவளம்..... கனிமவளம் /// ஆற்றுப்பாலம்,.... ஆற்றுப்பாலம் /// G Square.....G Square /// etc....etc


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை