உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலும் வற்ற போவதில்லை கருவாடும் தின்ன போவதில்லை

கடலும் வற்ற போவதில்லை கருவாடும் தின்ன போவதில்லை

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தினமும் பத்திரிகையாளரை சந்திக்கிறார். இதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா என மக்கள் யோசிக்கின்றனர். ஜனவரியில்தான் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். ஆனால், அ.தி.மு.க., கூட்டணி பற்றி 'அரைவேக்காட்டு' தினகரன் அவசர அவசரமாக ஏதேதோ பேசி, தனக்குத்தானே திருப்தி அடைந்து கொள்கிறார்; சம்மன் இல்லாமல் ஆஜராகிறார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் பற்றிய ரகசிய பேப்பரை கிழித்து போட்டேன் என்று பச்சை பொய் சொல்கிறார். ஆனால், அதை யாரும் நம்பவில்லை. ஜெயலலிதாவின் பதவிக்கு ஆசைப்பட்டு அவருக்கு துரோகம் செய்தவர் தினகரன். 'கடல் வற்றினால் கருவாடு தின்னலாம்' என காத்திருக்கும் கொக்கு போல் இருக்கிறார். கடலும் வற்றாது, தினகரனால் கருவாடும் தின்ன முடியாது. - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
நவ 12, 2025 09:24

த மி ழக மக்கள் அதிபுத்திசாலிகள்.. ஆ தி மு க கட்சியிலிருந்து அவரே வெளியேறி பின்னர் ஆ மு ம க என புதிய கட்சி துவங்கினார், பின்னர் அதில் தலைவராக சசிகலாவை தேர்வுசெய்தனர். ஒரு கேள்வி. தன கட்சி ஆரம்பித்துவிட்டு எவ்வாறு ஆ தி மு க கட்சியை மீட்டெடுக்க முடியும். சரியான தில்லாலங்கடியாக உள்ளது. இன்று வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் வெப் சைட்ல் உள்ளது மன்னார்குடி மாபியாக்கள் ஆ தி மு க கட்சிக்குள் நுழைந்தால், ஆமை புகுந்த வீடு உருப்படாது தற்சமயம் மக்கள் தலைவர் பழனிசாமி மிக சரியாக கட்சியை வழி நடத்துகிறார்.


மேலும் செய்திகள்