உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை செயல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் சென்று கார்த்திகை தீபம் ஏற்றவும், அதற்கு மத்தியப்படை பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், திருப்பரங்குன்றத்திலும், மலை உச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது. மலை உச்சியில் இருக்கும் தர்காவுக்கு செல்வதற்கும், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மலை ஏற வேண்டும் என்று சென்ற அனைவரையும் போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். மலையில் இருக்கும் தீபத்தூண் மற்றும் தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

விஸ்வநாத் கும்பகோணம்
டிச 07, 2025 22:12

இது இந்தியாவா, பாக்கிஸ்தானா? மத்தியில் ஆள்வது பாஜகவா காங்கிரஸா? ஸ்டாலின் இஸ்லாமியருக்கும் கிருஸ்துவர்களுக்கும் மட்டும் தான் முதல்வரா?


N Sasikumar Yadhav
டிச 07, 2025 19:41

இந்துமத துரோக திமுக உச்சநீதிமன்றத்தில் செருப்படி வாங்கி வந்தவுடன் இனிமேல் தினமும் ஒரு ஆளை நியமனம் செய்து தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் .


venu
டிச 07, 2025 19:20

அன்று தீபம் ஏற்றப்பட்டு இருந்தால் இன்று அங்கு நிற்கும்போலீஸ் வீரர்கள் வேறு தேவையான இடத்தில். பாதுகாப்பை பலபடுத்த அமர்த்தி இருக்கலாம் Ego problem


Sangi Mangi
டிச 07, 2025 18:33

போலீஸ் பாதுகாப்பு


vbs manian
டிச 07, 2025 16:50

கழகத்துக்கு நிம்மதி பெருமூச்சு. யாரும் சென்னை வெள்ளம் பற்றி பேசவில்லை. மக்கள் வீட்டுக்குள் முடக்கம். வாஹ நங்கள் தேங்கிய நீரில் தத்தளிப்பு தேங்கிய நீரால் தோற்று நோய் பரவு மின் கசிவு அபாயம் எல்லாம் வழக்கம் போல்.


Sundaran
டிச 07, 2025 15:06

நாட்டில் தலைபோகிற விஷயங்கள் ஆயிரம் உள்ளன.


V K
டிச 07, 2025 14:59

இன்னும் ரெண்டு மாதம் தான் பிறகு தேர்தல் ஆணையம் கீழ் போயிவிடும் அப்பொழுது பார்த்து கொள்ளுவோம்


Barakat Ali
டிச 07, 2025 14:52

இதே பாதுகாப்பு ஏன் விஜய்யின் கரூர் கூட்டத்துக்குத் தரப்படவில்லை ????


GMM
டிச 07, 2025 14:46

சர்வே கல் உயரம் 2 அடி. பூமிக்குள் 1 அடி. மீதம் 1 அடி மேல் இருக்கும். திராவிடர்களுக்கு சர்வே கல், எல்லை ஏதும் பிடிக்காது. பிரிட்டிஷ் சர்வே கல் இருந்தால், அது பிறருக்கு உரிய இடம் என்று பொருள் படும்?. தர்கா அமைத்து இருக்க முடியாது. மக்களை தான் பாதுகாக்க முடியவில்லை. திராவிட உயிர் மூச்சு மொழி, சாதி, மத கலவர ஏற்பாடு. ஒரு நாள் தமிழகம் அமைதியானால் திமுக நிலை தடுமாறும்?


ஜெகதீஸ்வரன் தண்டபானி
டிச 07, 2025 14:38

இது திராவிட மண் கல்லுக்கு பாதுகாப்பு பெரியார் வாழ்க