மேலும் செய்திகள்
தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுக்கணும்
2 hour(s) ago
பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு கட்டாயம்: அன்புமணி
2 hour(s) ago
பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் எடுபடாது: ரகுபதி
2 hour(s) ago
சென்னை: உள்ளாட்சி அமைப்பு களில் நியமன உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட்டதில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொதுச் செயலர் ஜான்சி ராணி வெளியிட்டு உள்ள அறிக்கை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக, 3,631 மாற்றுத்திறனாளிகளை நியமித்து, முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி. இது, மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்கிறது. இருப்பினும், எங்களது பிரதான கோரிக்கையான, உதவித்தொகை உயர்வு குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், நியமன உறுப்பினர்கள் தேர்வில் , பல்வேறு மாவட்டங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மற்றும் அவர்களின் குறைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில், அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், இந்த பணியிடங்களுக்கு பொருத்தமான, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக போராடியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளி களின் கோரிக்கை மற்றும் பிரச்னைகளை அறியாத நபர்கள், ஆளும் கட்சியினர், தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துவோரை, அரசு உறுப்பினராக தேர்வு செய்திருப்பது வேதனை அளிக்கிறது. அதேபோல், மாவட்டங்களில் உறுப்பினர் நியமனத் திற்காக, கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சில மாவட்டங்களில் கூட்டப்படாமல், உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டு உள்ளனர். எனவே, தேர்வு செய்யப்பட்ட நபர்களில் தகுதியற்றவர்களை மாற்றும் வகையில், உள்ளாட்சி நியமன உறுப்பினர்களின் தேர்வை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago