உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுலாப் பயணிகள் கூமாப்பட்டிக்கு வர வேண்டாம்; இணையத்தில் ட்ரெண்டிங் செய்த இளைஞர் அந்தர் பல்டி!

சுற்றுலாப் பயணிகள் கூமாப்பட்டிக்கு வர வேண்டாம்; இணையத்தில் ட்ரெண்டிங் செய்த இளைஞர் அந்தர் பல்டி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர்: அணை மூடப்பட்டு இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து ஏமாந்துபோவது வேதனையாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என கூமாப்பட்டியை ட்ரெண்டாக்கிய இளைஞர் தங்கபாண்டி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி என்பவர், அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலானது. பள்ளி படிக்கும் குழந்தைகள் மனதில் கூட கூமாப்பட்டி ஆழமாக பதிந்தது. அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கினர். பலர், கூமாப்பட்டி குறித்து வீடியோ வெளியிட்டனர்.மாவட்ட நிர்வாகமே கூமாப்பட்டிக்கு ஒதுக்கிய நிதி குறித்து விளக்கம் அளித்து இருந்தது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியிருந்தனர்.

யாரும் வராதீர்கள்

இந்த சூழலில் கூமாப்பட்டியை இணையத்தில் ட்ரெண்டாக்கிய இளைஞர் தங்கப்பாண்டி அளித்த பேட்டி: தற்போது பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூடிவிட்டார்கள். அதனால் இப்போது தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம். தற்போது மூடிவிட்டார்கள். அவர்கள் பாவம் எங்கேயோ இருந்து, எனது வீடியோவை பார்த்து வருகிறார்கள். அவர்கள் ஏமாந்து செல்வது எனக்கு மன வேதனையாக இருக்கிறது. மனசாட்சி குத்துகிறது என்னை நம்பி இங்கு வந்து ஒரு சுற்றுலாப் பயணிகள் ஏமாந்து செல்வது எனது மனது கேட்கவில்லை. எனது மனசாட்சி குத்துகிறது. நேற்று வரைக்கும் திறந்திருந்தது. ஐந்து வருடமாக முடங்கி இருந்த பிறகு திறந்திருந்தது. தற்போது மூடிவிட்டார்கள்.கஷ்டமாக இருக்கிறதுஇதனால் சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக யாரும் வர வேண்டாம். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இங்கு வந்து அவர்கள் ஏமாற்றம் அடைவது எனக்கு ஒரு மன வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். வீடியோ மூலம் இணையத்தில் ட்ரெண்டாக்கிய இளைஞரை தற்போது கூமாப்பட்டிக்கு வர வேண்டாம் எனக் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ajayautomotiveins
ஜூன் 30, 2025 15:50

எனது கண்ணோடத்தில் இந்த இளைஞர் தவறு செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவும் இல்லை. முடிடாங்க வராதீங்க என்று சொன்னது தவறு ஒன்றும் இல்லை. இங்கு தமிழக அரசு தான் தவறு செய்து உள்ளது. 1.ஒதுக்கிய நிதி எங்கே


Bhaskaran
ஜூன் 30, 2025 11:19

ஆதாயம் ஏதேனும் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பானுவ


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 29, 2025 20:04

21 கோடி நிதி என்னாச்சு என்று இப்போது தான் தெரிகிறது. மூன்று வருடமாக மூடி மறைத்தது . இப்போது இவர் கிளறி விட்டு விட்டார்.அலறிஅடித்துக் கொண்டு தம்பியை அன்பாக சொல்லி இருக்கிறார்கள்


கல்யாணராமன்
ஜூன் 29, 2025 19:59

புரளி கிளப்பிவிட்ட இந்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?


SRIRAM
ஜூன் 29, 2025 19:52

தீய மு க தம்பிய கூப்பிட்டு நல்ல அறிவுரை கொடுத்திருப்பார்கள்... அதான் தம்பி மாத்தி பேசுது....


கல்யாணராமன்
ஜூன் 29, 2025 19:49

இவர் அங்கு இருப்பதால் அது கூமாப்பட்டி அல்ல. அது...பட்டி!


Ramesh Sargam
ஜூன் 29, 2025 19:35

போக்கற்றவர்கள்.


பெரிய ராசு
ஜூன் 29, 2025 19:22

ஏன் குற்றாலத்தை குடித்து குளித்து ஊரை நாறடித்து பிளாஸ்டிக் சாக்கடை ஆக்கியது போதாதா ..கூமாபட்டியாவது நன்றாக இருக்கட்டும்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2025 19:00

வா? ஆனா வராதே?


Manaimaran
ஜூன் 29, 2025 18:23

உருப்படியா வேல வெட்டி இல்லைன இப்படிதான்