உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் தரையிறங்கிய திருச்சி விமானங்கள்

மதுரையில் தரையிறங்கிய திருச்சி விமானங்கள்

அவனியாபுரம் : பெங்களூரு-, சென்னையிலிருந்து திருச்சி வந்த விமானங்கள் கனமழை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டு மீண்டும் திருச்சி சென்றன. பெங்களூருவில் இருந்து நேற்றிரவு 7:20 மணிக்கு 142 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் இரவு 8:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றது. அங்கு கனமழை பெய்ததால் விமானம் மதுரையில் தரையிறக்கப்பட்டது. திருச்சியில் வானிலை சரியான பின்பு அந்த விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டது இரவு 9:15 மணிக்கு திருச்சி சென்றது.சென்னையில் இருந்து நேற்றிரவு 7:45 மணிக்கு புறப்பட்டு 8:40 மணிக்கு திருச்சியில் தரையிறங்க வேண்டிய விமானமும் கனமழை காரணமாக மதுரையில் தரையிறக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின் அந்த விமானமும் மதுரையில் இருந்து திருச்சி சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
மே 19, 2025 18:46

இந்த திருச்சி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக ஆக்க மதுரை விமானத்தை புறந்தள்ளியய ப.ச சிதம்பரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை