உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய திருச்சி சிவா: மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்

காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய திருச்சி சிவா: மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்

சென்னை: காமராஜரை கொச்சைப்படுத்தி பேசிய திருச்சி சிவா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுக-வினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் புகழ்கிறேன் என கர்மவீரர் காமராஜரை குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.தன் மறைவுக்கு முன்பு கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.அதோடு எமர்ஜென்சியின் போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இந்திராவிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திராவிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. காமராஜரை அன்று இந்திரா கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும்.மேலும், இந்திராவின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து தான் காங்கிரஸ் அன்று உடைந்தது. அப்போது காமராஜர் எதிர்த்துக் கொண்டு இந்திராவோடு கூட்டணி வைத்தது யார்? இதே கருணாநிதி தலைமையிலான திமுகதானே?காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது. சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலை கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் துரைமுருகன். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் ஆர்.எஸ். பாரதி. அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திருச்சி சிவா.உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது.கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பா.ஜ.,வும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

J. Vensuslaus
ஜூலை 19, 2025 03:04

காமராஜரை யாரும் தாழ்வாக பேசவில்லை. எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றி நடிகர் கட்சி கூட்டணியில் சேரும்படி செய்துவிடவேண்டும் என்பதுதான் பாஜக போன்ற கட்சிகளின் நோக்கம். இது நடந்தால் ஓட்டுகள் பிரியும், தேர்தலில் வென்றுவிடலாம் என்ற எண்ணம். ஆகவேதான் காமராஜரை தாழ்வாக திமுக காரர்கள் பேசிவிட்டார்கள் என்ற நாடகம். காங்கிரஸில்கூட சிலர் நடிகன் கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்ற நோக்கத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.


சாமானியன்
ஜூலை 17, 2025 08:52

அரசியல்வாதிகள் எப்போதுமே கடந்த காலத்திலேயே இருக்கின்றனர். மாலை மரியாதை போட்டாலும் தேர்தலில் கட்சி அரசியலுக்காக தோற்கடிப்பார்கள். தீயசக்தி திமுகவிலே விபீஷணராக திருச்சி சிவா இருந்தார். அவரையும் மூளை சலவை செய்து விட்டார்கள் பாவம். அடிக்கிற வெய்யிலில் ஏசி இல்லாமல் அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா ? திமுக உளரல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் திமுக ஜனநாயக கட்சி என்றால் நேற்று பிறந்த குழந்தை கூட சிரிக்கும்.


pmsamy
ஜூலை 17, 2025 07:53

காமராஜரை தவறாக பேசுவது தவறு நாகேந்திரன் சொல்வது சரி


ramani
ஜூலை 17, 2025 06:08

ஒருவிதத்தில் பார்த்தால் சரியாக இருக்கும். தமிழ்நாட்டை காப்பாற்ற நீங்க உங்க கட்சியுடன் அரசியலை விட்டு விலகுங்க என்று சொல்லியிருப்பார்


Rajan A
ஜூலை 17, 2025 05:59

ஜனநாயகத்தை ஒழித்து கட்டி விடுவார் என்பதால் கெஞ்சியிருக்கலாம். காமராஜர் பெயரை சொல்லவே தகுதி இல்லாதவர்கள் புரட்டை இன்னும் நம்பும் மக்களுக்கு அஞ்சலி


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 05:54

காந்திக்கு உரிமை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் காமராஜருக்கு உரிமை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் அவர் கடைபிடித்த நேர்மைக்கு மட்டும் உரிமை கொண்டாட ஆட்கள் இல்லை என்பதுதான் சோகம். காமராஜரை அவமதித்த நபரை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுக்காவிட்டால் மட்டுமே கூட்டணி தொடரும் என்று செல்வப்பெருந்தொகை அறிவிப்பார். ஏனென்றால் காமராஜர் யார் என்பது ரெளடிகளுக்கு தெரியாது


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:18

வாரிசு அரசியல் ஒழிந்தால் எத்துணை திமுக மண் திருடிகள் உழைப்பாளிகள் ஆவார்கள்?


arumugam mathavan
ஜூலை 16, 2025 22:33

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை திருச்சி சிவா தரம்தாழ்த்தி பேசியிருப்பது தமிழர்களுக்கே அவமானம். அவர்கால்தூசுக்குகூடா பெறமாட்டர்கள் இந்த லஞ்ச ஊழல்வாதிகள்


Subramanian N
ஜூலை 16, 2025 22:25

இந்த நாட்டை கெடுத்தவர்கள் நேரு , இந்திராதான்


Oviya Vijay
ஜூலை 16, 2025 21:59

உங்கள் அறிக்கையில் காமராஜரைக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்று அவர் மேல் உண்மையில் உங்களுக்குக் கரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை... திமுக கூட்டணியில் இன்னமும் காங்கிரஸ் தொடர்கிறதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகத் தான் அதில் தெரிகிறது... தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்கிறீர்கள். ஆனால் எடப்பாடியோ தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை என்று புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லையே... ஆனால் இத்தனையும் தாண்டி நீங்கள் அவர்களுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களே என்பது தான் ஆச்சர்யம...


Kjp
ஜூலை 16, 2025 22:53

ஒரு மாபெரும் பெருந்தலைவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இறந்து போன இன்னொரு தலைவர் என்னிடம் சொன்னார் என்று சொல்வது மிக அசிங்கமாக இல்லையா? நயினாரை விட்டு விடுங்கள்.. நாளைக்கு தன் சுயநலம் கருதி கண்டவரெல்லாம் கருணாநிதி என்னை கட்டி பிடித்து அழுதார் என்று என்று சொல்வார்கள்.இது சரி யா ஓவியா?


Rajan A
ஜூலை 17, 2025 06:00

200 வந்து விட்டதா?


Rajan A
ஜூலை 17, 2025 06:01

பிடி 200


Rajan A
ஜூலை 17, 2025 06:00

₹200 வந்து விட்டதா?


புதிய வீடியோ