உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  150 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வேலு நாச்சியார் மேம்பாலம் திறப்பு

 150 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வேலு நாச்சியார் மேம்பாலம் திறப்பு

மதுரை: மதுரை மேலமடை சந்திப்பில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பா லத்தை முதல்வர் ஸ்டா லின் நேற்று திறந்து வைத்தார். மதுரை கே.கே.நகர் - அண்ணா நகர் இடையே சிவகங்கை சாலை, மேலமடை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண, இச்சந்திப்பில் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை முடிவெடுத்தது. கடந்த 2023 அக்., 30ல் இப்பாலத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம் 950 மீட்டர்; அகலம் இருபுறமும் தலா, 7.5 மீட்டர் சாலையும், அதன் கீழ் சர்வீஸ் ரோடு, ரவுண்டானா மற்றும் இருபுறமும் தலா, 1.5 மீட்டர் அகலத்தில் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இப்பாலப் பணிகள் முடிவடைந்து, 'வீரமங்கை வேலு நாச்சியார் பாலம்' என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின், 100 அடி துாரம் நடந்து சென்று, அதன்பின் வேனில் ஏறி, முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்றார். அவருடன், அமைச்சர்கள் நேரு, வேலு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, தியாகராஜன், பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !