உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விபரத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு, கடந்த 2022 மே 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகி, ஹிந்து அறநிலையத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கான உரிய விளக்கங்கள் இடம்பெற்ற அறிக்கையை தாக்கல் செய்தனர். அதையடுத்து, ''கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அறிநிலையத் துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ''கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை பொது தீட்சிதர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்; தற்போது, அதை மாற்ற முடியாது,'' என்றார். பக்தர் ராதா தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, ''கடந்த 3ம் தேதி, சிதம்பரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்தேன். கோவிலில் பொருத்தப்பட்ட, 55 கண்காணிப்பு கேமராக்களில், 25 மட்டுமே இயங்குகின்றன. கடந்த 2016 மே 1 முதல், சிதம்பர ரகசிய வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வு செய்ததில், 16க்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவற்றை பட்டியலிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்துள்ளேன்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட பொது தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர், 'அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின் நகல் வழங்கப்படவில்லை. பக்தர் என கூறி கொண்டு, அறநிலையத் துறைக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்' என, குற்றம்சாட்டினர். இதையடுத்து நீதிபதிகள், 'கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய, யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். பக்தர் ராதா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

G Mahalingam
செப் 12, 2025 16:30

ஆமை புகுந்த இடம் உருப்படாது. அது போல திமுக புகுந்த இடம் உருப்படாது . கோவில் நிலத்தை எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று நினைப்புதான் திமுகவுக்கு.


V Venkatachalam
செப் 12, 2025 14:30

சிம்பிள் ஆன்ஸர். எவன் ஒருவன் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றாலும் கோயில் நிர்வாகத்திடம் கேட்க சொல்லி கேஸை முடித்து விட வேண்டும். எவனாயிருந்தாலும் கோயில் நடை முறைக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும்.இந்த விஷயங்கள் கோர்ட் விசாரணைக்கு உட்பட்டது அல்ல. இவன்கள் சொல்ற மாதிரி தீட்சிதர்கள் மோசமா நடந்து கொண்டாலும் சரி. இவனுங்க அஹங்காரம் பிடித்தவனுங்க. அதை அங்க காண்பிக்கனும்ன்னு நினைக்குறானுங்க. இவனுங்க எப்ப கீழே இறங்குவானுங்கன்னு இருக்கு.


venugopal s
செப் 12, 2025 11:45

மற்ற கோவில்களில் சிறப்பு கட்டண தரிசனம் கூடாது என்று கூறும் சங்கிகள் இங்கு மட்டும் கனகசபை மண்டப தரிசனம் செய்ய முக்கிய பிரமுகர்களுக்கு அனுமதி அளிப்பதை ஆதரிப்பது ஏன்? எல்லா பக்தர்களுக்கும் அனுமதி அளிப்பதே சரியான முடிவாக இருக்கும்!


vbs manian
செப் 12, 2025 09:51

பல நூற்றாண்டுகளாக எந்த குறையும் தடங்கலும் இன்றி நடந்து வந்த தரிசனம் ஏன் இப்போது பிரச்சினையாக வெடித்துள்ளது. உண்மையான பக்தி மறைந்து அரசியல் உள்ளே புகுந்து விட்டது. மக்களுக்கு உருப்படியாக ஏதும் நன்மை செய்ய முடியாத அரசியல் வாதிகள் மலிவு விளம்பரத்துக்காக கோவிலுக்குள் புகுந்து விட்டனர். நடராஜர் கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் பல கோவில்களில் இப்போது நாள் தோறும் பிரச்சினைகள் வெடித்து கிளம்புகின்றன.


திகழ்ஓவியன்
செப் 12, 2025 12:58

கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும், என, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார். வெட்கமா இல்லை அப்போ பொது மக்களுக்கு தரிசனம் பண்ண இடமில்லையா , அப்போ பக்தி உங்களுக்கு மட்டும் தான ஆனா உண்டியல் நாங்கள் தானே காணிக்கை செலுத்துகிறோம்


தத்வமசி
செப் 12, 2025 09:09

காஷ்மீர் தர்காவுக்குள் ஒரு இடத்தில் இந்தியாவின் சின்னமான மூன்று தலை சிங்கத்தை பெயர் பலகையில் வைத்ததை சேதாரம் செய்தது இந்த நீதிபதிகளுக்கு தெரியுமா ?


நாராயணன் ஐயர் , சிதம்பரம்
செப் 12, 2025 08:24

சிதம்பரம் கோவிலில் யார் வேண்டுமானாலும் கனக சபையில் நின்று தரிசனம் செய்ய முடியும். கோவில் நிர்வாக விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். DMK தனது இந்து விரோத செயல்பாடுகளை இதிலும் காண்பிக்கிறது. படு கேவலமான செயல். இந்து மக்கள் ஆகிய நமக்கு புத்தி இல்லை. காசு வாங்கி ஓட்டு போட்டவர்களை தான் காரணம் சொல்ல வேண்டும். மக்கள் வழக்கம் போல் பேசாமல் இருக்கிறார்கள். இருண்ட காலம் தான்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 12, 2025 07:41

கனகசபை என்பது வெறும் 10-20 நபர்கள் மட்டுமே நிற்க இடம் உள்ள, நடராஜர் சன்னதியின் முன்புறம் உள்ள ஒரு சிறிய இடம். அந்த பகுதி மூலமாகத்தான் தீக்ஷிதர்களும் நடராஜர் சன்னதிக்கு செல்ல முடியும். அங்கிருந்துதான் அனைத்து வழிபாடுகளும், ஆராதனைகளும் நடத்த முடியும். அங்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாத காரியம். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தீய நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளும், நபர்களும் தொடர்ந்து இதுபோல வழக்குகளை நடத்திவருகிறார்கள். நேபாளம் போல திடீரென ஒருநாள் சிதம்பரம் பொதுமக்கள் பொங்கினார்கள் என்றால் இவர்களில் பெரும்பாலோர் உயிருக்கு பயந்து ஓடவேண்டிவரும். சிதம்பரம் மக்களின் பிரதான கோயிலில் தொடர்ந்து இப்படி பிரச்சினை உருவாக்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 12, 2025 08:15

அப்படி ஒரு வன்முறை நடப்பதைத்தான் இவர்கள் விரும்புகிறார்கள் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. பின்னர் அதையே காரணமாக காட்டி தீக்ஷிதர்களின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி கோவிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறை கையகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதுபோன்ற வழக்குகள் நடத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. எப்படி ஸ்டெர்லைட் ஆலையில் வன்முறை நிகழ்த்தி மூடவைத்தார்களோ அதேபோன்ற ஒரு முயற்சி. இது கோயில் என்பதால் தெருவில் இறங்காமல் கோர்ட் மூலம் நாடகம் நடத்தப்படுகிறது.


Naresh Kumar
செப் 12, 2025 07:32

நான் இரண்டு முறை கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்திருக்கிறேன் ஒரு பக்தனாக.. நான் ஒன்றும் ஒரு பெரிய வி ஐ பி அரசியல் பின்புலம் கொண்டவனே இல்லை ஒரு சாதாரண பக்தனாகவே சென்றேன் வழிபட அனுமதி கொடுத்தார்கள் சாமி கும்பிட்டு விட்டு வந்தேன் இப்போது இதில் என்ன பிரச்சனை!!


vadivelu
செப் 12, 2025 07:17

ஒரு நடிகரின் வீட்டிற்குள் பல வித வேலைகளுக்கு ஆட்கள் வந்து போவார்கள், அவர்கள் அனைவர்க்கும் அனுமதி வழங்குவது வீட்டை கவனிக்கும் மேலாளருக்கு மட்டுமே உண்டு. மெரினா பீச் கதவுகள் இல்லாத பரந்த இடம், ஆனாலும் அனுமதிக்கப்பட்ட காவல்துறையினர்கள் மட்டுமே இரவு நேரங்களில் கண்காணிப்பார்கள். இறைவன் இருக்கும் இடமாக ஒரு மதத்தினர் கருதும் இடங்களில் சில கட்டுபாடுகள் பல காரணங்களுக்காக இருக்கத்தான் செய்யும். ஒரு முதலமைச்சரின் வீட்டு வாசலில் காவலுக்காக கூட யார் வேண்டுமானாலும் இருக்க முடியாது.


Varadarajan Nagarajan
செப் 12, 2025 07:05

ஏற்கனவே ஹிந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கிடையாது எனவும் தீக்கிஷதர்கள் தொடர்ந்து நிர்வகிக்கவும் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் நீதிமன்றம் தேவையில்லாமல் வேறு வழக்குகளில் அறநிலையத்துறையிடம் விளக்கம்கேட்டு அவர்களை சேர்க்கக்கூடாது. இது முந்தய தீர்ப்பிற்கு விரோதமானது. எந்த விளக்கமானாலும் தீக்ஷிதர்களிடமே கேட்கவேண்டும்


புதிய வீடியோ