உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டுவசதி துறை செயலர்கள் அடுத்தடுத்து மாற்றம் ஏன்?

வீட்டுவசதி துறை செயலர்கள் அடுத்தடுத்து மாற்றம் ஏன்?

தமிழக வீட்டு வசதி துறையின் செயலர் சமயமூர்த்தி, நான்கு மாதங்களில் மாற்றப்பட்டு, புதிய செயலராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 மாதங்களில், வீட்டு வசதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள நான்காவது அதிகாரி இவர். அடுத்தடுத்த மாற்றங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.வீட்டு வசதித்துறை செயலர் தான், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான- சி.எம்.டி.ஏ., துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். சி.எம்.டி.ஏ.,வில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு அதிகம். நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கான 35 கோப்புகளும், டெண்டர்கள் தொடர்பான 15 கோப்புகளும் சி.எம்.டி.ஏ.,வின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் சமயமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தது தான், இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். சமயமூர்த்தியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை