உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் மனைவி சாய்ரா பானு!

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் மனைவி சாய்ரா பானு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் அவர் பிசியாக உள்ளார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 1995ம் ஆண்டு சென்னையில் சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இந்நிலையில், ரஹ்மானை, அவரது மனைவி சாய்ரா பானு பிரிந்து செல்வதாக ஆங்கில மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.இது தொடர்பாக அவரது வக்கீல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி ஆங்கில செய்தி சேனல் கூறியதாவது: திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து,கணவர், ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்து உள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்கு பிறகு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாகியது. உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுக்கு பின் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஒருவருக்கு ஒருவர் ஆழமான அன்பை தொடர்ந்த போதிலும், சில முரண்பாடுகள் எங்களுக்கு இடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கி விட்டது. அந்த முரண்களை சரி செய்து இணைப்பை தொடரும் முயற்சியில், இருவரும் தோல்வி அடைந்து விட்டதாக உணர்ந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனை மற்றும் சோகமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். இந்த சவாலான நேரத்தில், வாழ்க்கையில் கடுமையான காலகட்டத்தை கடந்து செல்லும் தங்களின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

sundar
நவ 26, 2024 08:59

ஓவர் உணர்ச்சி வேண்டாம். நஷ்ட ஈடு கொடுத்து கணக்கு காண்பிக்கலாம். கொடுப்பவருக்கு செலவுக்கு கணக்கு. வாங்கும் பெண்ணிற்கு வரி இல்லை. குட்டிக் கழிச்சு, சரி பாருங்கப்பு


B RAJARATHINAM
நவ 21, 2024 20:22

இர்ஃபான் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் இதை ஒரு இந்து செய்திருந்தால்.... சமீபத்திய உதாரணம் நடிகை கஸ்தூரி


B RAJARATHINAM
நவ 21, 2024 20:17

அப்பா இந்து அம்மா முஸ்லீம் என்றால் பிறக்கும் குழந்தை தந்தை வழி மதத்தவராகதான் இருப்பார்கள்.ஆனால் சினிமாத்துறையில் மட்டும் இதற்கு எதிராக தான் நடக்கும்.விஜய்யும் அப்படிதான்.இன்னும் பல பேர் இப்படி இருப்பார்.இவர் என்னமோ கடவுளுக்கு பயந்தவர் என்று எல்லா இடங்களிலும் கூறி விட்டு கட்டிய மனைவியை விவாகரத்து பண்ணும் அளவுக்கு குடும்பத்தில் குழப்பம் உள்ளதோ???


Narasimhan
நவ 21, 2024 18:04

இவன் ஒரு டூப்ளிகேட் முஸ்லீம். இவனை போய் தேர்ந்தெடுத்த அந்த பெண்மணிக்கு அனுதாபங்கள்


Bye Pass
நவ 21, 2024 14:49

மோஹினி விவாகரத்து இந்த விவாகரத்துக்கு பிறகு நிகழ்ந்திருக்கிறது


AMLA ASOKAN
நவ 20, 2024 19:18

இந்துமதத்தில் திருமண பந்தம் பிரிக்க முடியாதது . நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் . இஸ்லாத்தில் அது அனுமதிக்கப்பட்டுள்ளது . அதை சாயிரா பானு உபயோகித்துக்கொண்டார் .


SUBBU,
நவ 20, 2024 17:53

ஹிந்தி மொழியை எதிர்ப்பதாக காட்டிக் கொண்ட இவன் அப்போது போட்ட டிவீட் பயங்கர வைரலானது தமிழணங்கு என்ற பெயரில் அந்தப் படத்தில் தமிழ்த்தாயை கருப்பு கலரில் தலைவிரி கோலமாக கையில் வேலுடன் ஆக்ரோஷமாக இருப்பது போன்று மிக கேவலமாக சித்தரித்து அந்த வேலின் முனையில் தமிழின் எழுத்தான "ழ" வை இடம் பெறச் செய்து அந்த படத்தின் கீழே பாரதிதாசன் எழுதிய இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்ற பாடல் வரிகளை போட்டு தன்னை ஒரு தமிழ் பற்றாளனாகவும் ஹிந்தி எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டான் தமிழ்த்தாயை அப்படி கேவலப் படுத்தியதற்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறான் இந்த A.R.ரஹ்மான்.


Rasheel
நவ 20, 2024 11:32

6 மாதத்தில் முழு கதை ரிலீஸ் ஆகும்.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
நவ 20, 2024 14:47

தனுஷ் மைண்ட் வாய்ஸ்: சினிமா ஃபீல்டுல எவன் டைவர்ஸ் பண்ணாலும் நம்மளவே குறு குறுன்னு பாக்குறானுக... ஆமா அல்லா ரக்கா ரஹ்மான் சமீபத்தில் இசையமைத்த தனுஷ் படம் எது?


Nagarajan L
நவ 20, 2024 11:25

இவர் இறுதியாக இசை அமைத்தது தனஸ்சின் ராயன் படத்தில். இன்னும் எத்தனை குடும்பத்தை பிரிக்கப்போகிறதோ இந்த தனுஷ் . வயது வித்யாசம் பாராமல் குடும்பத்தை பிரிப்பவர் இந்த தனுஷ் என்னும் மந்திரக்காரன்.


AMLA ASOKAN
நவ 20, 2024 09:48

இஸ்லாத்தில் அவர்களது இறைவனால் வெறுக்கப்பட்ட ஒரு செயல் தேவையற்ற விவாகரத்து. தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும்பொழுது இரு தரப்பினரின் குடும்பத்தார் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் தான் ஒரு கணவன் தன் மனைவியை இரண்டு மாத இடைவெளிக்கு பின் மூன்று முறை தலாக் கூறுவதும் உறவினர்கள் சமரசம் செய்தும் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த பகுதியின் ஜமாத்தார் முன்னிலையில் பத்திரத்தில் கையெழுத்திட்டு தான் விவாகரத்தை அவனால் பெறமுடியும். இந்த நடைமுறையை தவிர்த்தால் அந்த ஜமாத்தார் அவனை விலக்கி வைத்து விடுவார்கள். ஆனால் மனைவி விவாகரத்து விரும்பினால் அதனை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். தலாக் சட்டம் 2022 ல் நிறைவேற்றப்பட்ட பின் இஸ்லாத்திற்கு எதிரான உடனடி தலாக் தடை செய்யப்பட்டுள்து . அதை முஸ்லிம்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதில் உள்ள ஆண்டு மூன்று சிறை தண்டனை என்பதை தான் எதிர்க்கிறார்கள் . நடைமுறையில் நீதிமன்றங்களில் ஏழு ஆண்டுகளுக்கு பின் தான் விவாகரத்து பெறமுடியும் , அதில் முஸ்லீம்களின் கூட்டம் மிக மிக குறைவு . குடும்ப சிக்கல் காரணமாக சாய்ரா பானு ரஹ்மானை இலகுவாக விவாகரத்து செய்து விடலாம் . நீதிமன்ற தலையீடு தேவையில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை