உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 ரூபாய் டீ, 20 ரூபாய் சமோசா திட்டம் தமிழக ஏர்போர்ட்களில் அமலுக்கு வருமா?

10 ரூபாய் டீ, 20 ரூபாய் சமோசா திட்டம் தமிழக ஏர்போர்ட்களில் அமலுக்கு வருமா?

சென்னை: 'தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், மத்திய அரசின், 'உடான் யாத்ரி கபே' என்ற, குறைந்த விலை உணவகத்தை துவக்க முன்வர வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள், உலகத் தரத்தில் இயங்குகின்றன. பயணியர் தேவைக்கேற்ப, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.இங்கு உணவகம் நடத்த, ஆணையத்திற்கு விமான நிலையங்கள் அதிக தொகையை செலுத்தி ஒப்பந்தம் எடுக்க வேண்டும். இதனால், உணவகங்களில் பொருட்கள் விலை மிக அதிகம்.முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வருவோர், விமான நிலையங்களில் உள்ள உணவகங்களின் விலை பட்டியலை பார்த்தால் பயந்து விடுவர்.அனுமதிதண்ணீர் பாட்டில், 125 ரூபாய், இட்லி, 250, பிரியாணி, 450 ரூபாய் என, விலை இருக்கும். மத்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம், 100 மி.லி, அளவு குடிநீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கிறது.இதனால், பயணியர் அதிக விலை கொடுத்து, தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி, பயணியருக்கு குறைந்த விலையில், குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், மத்திய அரசு, 'உடான் யாத்ரி கபே' எனப்படும், விலை குறைவாக பொருட்கள் விற்கும் உணவகங்களை திறக்க முடிவு செய்தது.முதற்கட்டமாக, கோல்கட்டா விமான நிலையத்தில் இதுபோன்ற உணவகம் கடந்த மாதம் துவக்கப்பட்டது. அதேபோன்ற உணவகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, விமான பயணியர் சிலர் கூறியதாவது:கல்வி, வேலை, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக, விமான போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.வழக்கம்விமான நிலையத்தில், 'போர்டிங்' பாஸ் வாங்கி விட்டு, விமானத்திற்காக காத்திருக்கும் நேரங்களில், உணவு பண்டங்களை சாப்பிடுவது வழக்கம். தற்போது, எந்த விமான நிலையமாக இருந்தாலும், ஒரு டீ, காபிக்கு குறைந்தது, 150 ரூபாய் செலவிட வேண்டும்.தனி நபராக பயணிக்கும் போது, இந்த விலையானது யாரையும் பாதிப்பதில்லை. அதுவே, குடும்பத்துடன் செல்லும் போது, பெரும் சிக்கலாக உள்ளது. நான்கு பேருக்கு தண்ணீர் பாட்டில் வாங்கினாலே, 500 ரூபாய் செலவாகும்.இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளை திருப்தியாக சாப்பிடுவதற்கு, குறைந்தது, 500 முதல் 1,000 ரூபாய் செலவிட வேண்டும். விமான டிக்கெட் விலை தான் ஆயிரக்கணக்கில் உள்ளது என்றால், உணவு வகைகளின் விலையும் பல மடங்கு உள்ளது.எனவே, மத்திய அரசின், 'உடான் யாத்ரி கபே' திட்டத்தை தமிழக விமான நிலையங்களில் செயல்படுத்தினால், பயணியருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ram pollachi
ஜன 25, 2025 20:13

இஞ்சி டீ, சமோசா எல்லாம் குறைந்த விலைக்கு வேண்டும் என்றால் அது ராம்தேவால் மட்டுமே முடியும்... சமோசாவுக்கு தொட்டுக்க பச்சை மிளகாய் அதை வாங்கி சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது.


hariharan
ஜன 25, 2025 19:51

சாதாரண மக்களும் இப்பொழுது விமானங்களில் பயணம் செய்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஒரு முதிய தம்பதிகள் ஆட்டோவில் வந்திறங்கினர். கார்களில் வருபவர்கள் கிட்டத்தட்ட டிப்பார்ச்சர் வாயில் வரை அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆட்டோவில் வருபவர்கள் ஒரு தடுப்பு இருக்கிறது, அதற்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை. ஏன் ஆட்டோவில் வருபவர்கள் மனிதர்களில்லையா? வயதுமுதிர்ந்த பயணிகள் ஆட்டோவில் வந்தால் ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடதா? ஏன் இந்த ஓர வஞ்சனை காவல்துறைக்கு? இதுதான் திராவிட மாடலோ?


Sundar R
ஜன 25, 2025 12:45

இருபது வருடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் எடுத்த பிறகு காத்திருக்கும் இடத்தில் ஒரு லிப்டன் டீ கம்பெனியின் அவுடலெட் இருக்கும். ஐந்து ரூபாய்க்கு சுடான டீ கொடுப்பார்கள். டீ பாக்கெட்டுகள் கூட கம்பெனி விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், டிபன் வகைகளை பாரதத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் அதிகப் பணம் கொடுத்துத் தான் வாங்கியாக வேண்டும். சென்ற மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் எடுத்த பின்பு காத்திருக்கும் இடத்தில் நான்கைந்து ஹோட்டல்கள் இருக்கின்றன. ஒரு பாவ் பாஜி ரூபாய் 450-க்கும், ஒரு தயிர் சாதம் ரூபாய் 475-க்கும் நாங்கள் இருவர் வாங்கி சாப்பிட்டோம். கேந்திரிய சர்க்காரின் உடான் மாத்ரி கஃபே விமான பயணிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.


அப்பாவி
ஜன 25, 2025 11:08

உள்ளே பத்து ரூவாய்க்கு சமுய்சா வித்து பிரயாண கட்டணத்தில் சர்வீஸ் சார்ஜ் 100 ரூவா ஏத்தி உருவிடுவாங்க.


Ganesh Subbarao
ஜன 25, 2025 11:52

தான் dvd யா பையன் என்றால் மத்தவனும் அப்படியா? 21ம் பக்கத்துக்கு பிறந்தவணே


abdulrahim
ஜன 25, 2025 10:22

விமானத்தில் செல்வோர் அனைவரும் பணக்காரர்கள் கிடையாது குறைந்த ஊதியத்தில் பணிக்கு செல்வோரும் உண்டு அவர்களிடம் ஏன் இந்த கொள்ளை அடிக்க வேண்டும் ? விமான டிக்கெட் குறைவாக போட்டி போட்டு விற்கும் போது உள்ளே இந்த அதிக விலைவாசி மிக கொடுமை, அதிலும் கொழும்பு விமான நிலையத்தில் அவர்கள் இந்திய ரூபாய் வாங்க மாட்டார்கள் அமெரிக்க டாலர் அல்லது அரபு ரியால், தினார் வேண்டும் என்பார்கள் அநியாயக்காரர்கள்.


abdulrahim
ஜன 25, 2025 10:18

விமான நிலையத்திற்குள் குடி தண்ணீர் எங்கே உள்ளது ? அதெல்லாம் ல்லை சென்னை ஏர்போர்ட்டில் இருந்து சவுதி வந்த போது கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஊரில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை டிராலியில் வைத்திருந்தேன் அதை எடுக்க சொல்லி பிரச்சினை செய்தார்கள் நல்லவேளை அதிலும் ஒரு நல்லவர் இருந்தார் அவரது விமானம் புறப்பட இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது எனவே கொண்டு செல்லட்டும் என சொன்ன பிறகே விட்டார்கள் ,உள்ளே அதிக விலைக்கு தண்ணீர் விற்க வேண்டி இந்த அடாவடி செய்கிறார்கள், உள்ளே என்று தலை வலிப்பது போல இருக்கவே ஒரு காபி வாங்கிய போது 250 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது ....


Ganesh Subbarao
ஜன 25, 2025 12:10

பாகிஸ்தானுக்கு போங்க


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 12:12

பொய் எழுதாதீர்கள். போர்டிங் கேட் வரை உங்கள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம். விமானத்துக்குள் செல்லும் முன்பு இருக்கும் கேட்டில் தான் எந்த திரவமும் அனுமதி இல்லை. துபாய் விமானத்துக்குள் நான் தயிர் சாதம் சிப்ஸ் எடுத்துச் சென்றுரிக்கிறேன்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 25, 2025 12:14

அதிக விலைக்கு தண்ணீர் விற்க வேண்டி இந்த அடாவடி செய்கிறார்கள் என்பதும் பொய். ஆங்காங்கே குடிநீர் குழாய்களும் பேப்பர் தம்ளர்களும் உள்ளன. ஊரிலிருந்து குடிநீர் கொண்டு வர என்ன அவசியம்??


TRUE INDIAN
ஜன 31, 2025 13:06

just think before comment, liquids brought other than the airport not allowed everywhere to avoid acid or liquid bomb at the flight, dont put useless and baseless comment without knowing, can you bring water from outside in SAUDI AIRLINES? i am also abroad and knew the protocol.


Neelachandran
ஜன 25, 2025 10:00

ஏர்போர்ட்டுக்கு வருபவர்கள் எல்லாம் அன்றாடங்காய்ச்சிகள்.கிராமத்திலேயே டீ பத்து ரூபாய் விலையாகிறது. என்னமாதிரியான பொருளாதாரச் சித்தாந்தம் இது?


abdulrahim
ஜன 25, 2025 13:50

வைகுண்டேஸ்வரன் , சென்னை ஏர்போர்ட்டில் எங்கே இருக்கிறது நீங்க சொல்லும் தண்ணீர் குழாய்களும் பேப்பர் கப்பும் ?


abdulrahim
ஜன 25, 2025 13:56

வைகுண்டேஸ்வரன் கொஞ்சம் சிந்தித்து எழுதவும் போர்டிங் கேட் வரை பிரச்சினை என்று யார் சொன்னது ,உள்ளே விற்கும் அவலத்தை பற்றித்தான் இங்கே பேசுகிறோம் , போர்டிங் கேட் வரைதான் தாகம் எடுக்குமா ,தலைவலிக்குமா, உள்ளே செற்ற பிறகு நடப்பதை தான் பேசுகிறோம், இமிக்ரேஷன் முடிந்து பிளைட் கு போகும் நுழைவு வாயிலில் தான் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் அப்போது எந்த இடத்தில தண்ணீர் குழாய் இருக்கிறது ?


Oru Indiyan
ஜன 25, 2025 09:28

அம்மா உணவகம் திறக்கலாம். கள்ளு கடை திறக்கலாம்.


Ganesh Subbarao
ஜன 25, 2025 13:03

பீர், மது வகையறா விமான நிலையத்தில் கிடைக்கும் ஏன் சிகரெட் கூட kidaikkum


baala
ஜன 25, 2025 09:24

இங்கு கோமியம் எங்கு வந்தது.


veeramani
ஜன 25, 2025 09:23

இந்த வியாபாரம் சரியானது அல்ல விமான நிலையங்கள் என்றால் தரம் இருத்தல் வேண்டும் இருப்பது ரூபாய் சமோசா எந்த எண்ணையில் சுடுவான் மக்களே உங்களது காய் லக்ககில் தின் பண்டங்கள் எடுத்து செல்லலாம். தண்ணீர் சிறு பாட்டில் எடுத்துச்செல்லலாம் சும்மா புருடாயிடாதீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை