உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கட்டாயத்தில் 1 லட்சம் இந்தியர்கள்

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கட்டாயத்தில் 1 லட்சம் இந்தியர்கள்

வாஷிங்டன்: அமெரிக்க குடியுரிமை விதிகளில் மாற்றம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளால், எச்1பி விசா வைத்துள்ள பெற்றோருடன் குழந்தையாகச் சென்று, தற்போது 21 வயதை கடந்த ஒரு லட்சம் இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எச் 1பி விசா

அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், 65,000 பேருக்கு இந்த விசா வழங்கப்படும். இதைத் தவிர, அமெரிக்க கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு முடிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 20,000 பேருக்கும் எச்1பி விசா வழங்கப்படும்.இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.இவ்வாறு எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோர், தங்களுடைய குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியும். இதற்காக, அந்தக் குழந்தைகளுக்கு எச்4 என்ற விசா வழங்கப்படும். அமெரிக்க குடியுரிமை சட்டங்களின்படி, 21 வயது வரையுள்ளவர்களே, எச்1பி விசாவில் பணியாற்றும் பெற்றோரைச் சார்ந்திருப்பதாக கருதப்படுவர்.அந்த வயதைத் தாண்டியவர்களுக்கு, வேறு வகையான விசாவுக்கு மாறுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு வந்தன. அதாவது அவர்களும் ஏதாவது வேலையைத் தேடி அதற்கேற்ப அமெரிக்க விசாவை பெற்றுக் கொள்ளலாம்.தற்போதைய நிலையில், அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள், கிரீன் கார்டு எனப்படும் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளில் இருந்து, 100 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.அமெரிக்க குடியேற்றத் துறை புள்ளி விபரங்களின்படி, 2023 மார்ச் நிலவரப்படி, எச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் 1.34 லட்சம் குழந்தைகள், 21 வயதைத் தாண்டும் நிலையில் இருந்தனர்.

சந்தேகம்

ஏற்கனவே, எச்1பி விசாவுக்கு அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 21 வயதை பூர்த்தி செய்யும் பெற்றோரை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, வேலைக்கான விசா வழங்குவதற்கு டெக்சாஸ் நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.இந்தக் காரணங்களால், 21 வயது நிரம்பிய ஒரு லட்சம் இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்கள் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.ஆனால், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம். இதனால், இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Sampath Kumar
மார் 13, 2025 08:37

அப்போ சரி உங்க வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் ஓகே நாங்களும் கட்டவூம் பொறுத்து இருந்து பாருங்கோண்ணா


आपावी
மார் 07, 2025 09:20

அமெரிக்காவிலிருந்து இவிங்க அப்பப்போ குழந்தைகளுடன் வந்து போடற ஆட்டம் இருக்கே.. தாங்க முடியாது.. தாட் பூட் நு ஸ்லாங் ஆங்கிலம், பீட்சா, பர்கர்னு தீனி, கோகோ கோலான்னு மூணு வாரத்துக்கு ஆடிட்டு ஓடிப் போயிருவாங்க. தமிழ்ல அப்பப்போ ரெண்டு வார்த்தை பேசும்க. உள்ளூர் குழந்தைகளை கட்சி கட்டிக்கிட்டு கீழே தள்ளி உடுவாய்ங்க. அவிங்க அம்மா அப்பாக்களோ ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து குதிச்ச மாதிரி நடந்துப்பாய்ங்க. ரெண்டும் ஒரு டவுசரும், டீ சர்ட்டும் போட்டுக்கிட்டு நாகரிகத்தைக் காட்டிப்பாங்க. கார்ல கோவில்களுக்குப் போய் அங்கே அமெரிக்க பெருமாள் கோவில்களைப் பத்தி அடிச்சு உடுவாங்க. கிட்டத்தட்ட எல்லோரும் இதே மாதிரிதான்.


பாமரன்
மார் 07, 2025 11:15

சூப்பரா சொன்னீங்க... அத்தனையும் உண்மை... இதுக்கும் டீம்காவ திட்டி யாரும் பதில் போடாமல் இருக்கனும் அமெரிக்க பெருமாளே....


Dr Sundar
மார் 07, 2025 11:29

அங்கே மட்டும் எல்லை ஆஸ்திரேலியா விசா வாங்கிக்கொண்டு 50 + ஆங்கிலச் தெரிyamal பல் இடங்களின் வேலை பார்த்து ஊருக்கு பணம் அனுப்புகிறார்கள் பாவமா இருக்கு எனக்கு தெரிந்து 4 நம் ஜெனகள் அக்கால இறந்துவிட்டார்கள் ஆசை பணம் குடும்ப நிலை


அப்பாவி
மார் 07, 2025 06:46

இங்கே வாங்க. ரெண்டு கோடி வேலை காத்திருக்கு.


வாய்மையே வெல்லும்
மார் 07, 2025 10:59

யாரு ரொஹின்யா ஆட்களுக்கே இங்க வேலை இல்லைன்னு நொந்து போயிட்டு திருட்டு வழியிலே வந்த ப்பாதையில் ஓடிடலாமா என இருக்கிறார்கள் நீங்கவேற காமெடி பண்ணிட்டு


வாய்மையே வெல்லும்
மார் 07, 2025 11:18

கஞ்சா அபின் தங்க கடத்தல் வேலையில் உங்கஆட்களுக்கே ஆப்பு ஜாஸ்தி விழுதாமே அது உங்க கண்களில் படவில்லையா? குருவியின் ரக்கையை பக்குவமாக அடக்கிய விமான ஊர்தி செயலர்களுக்கு நன்றியை சொல்ல சாம்பிராணி புகை வாசிகள் காத்து உள்ளனர்


Kasimani Baskaran
மார் 07, 2025 06:20

நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றப்படுகிறார்கள். இதில் டிரம்பை குற்றம் சொல்ல முடியாது. ஒரு சில நாடுகளே பிரதான விண்ணப்பதாரரைத்தவிர குடும்பத்தில் உள்ளவர்கள் வேலை செய்ய அனுமதிப்பார்கள். முன்னர் கருணைக்கடலாக இருந்த அமேரிக்கா இனி அப்படி இருக்காது என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.


visu
மார் 07, 2025 08:40

நிதர்சனம். அமெரிக்கா அவர்கள் நாட்டை தங்களுக்கான நாடக மாற்ற நினைக்கிறார்கள் தவறொன்றும் இல்லை .நாம் இட ஒதுக்கீடு என்ற பெயரில் நம் வசதிக்கு குழப்புவதில்லையா அதுபோலத்தான்


Thiru
மார் 07, 2025 06:09

சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரபோல வருமா


Akash
மார் 07, 2025 06:09

No this is not undocumented category.. Parents moved in with valid H1B & their children on H4 or F1 visa - all valid and applied for green card. That takes 20 years. Meanwhile child reaches age of 21 and can no longer be in a dependent visa H4 category and will be thrown out of green card process. They have to move to some other country. You cant blame a foreign country for taking care of your own citizen...it is Indias duty to do so.


திருஞானம்
மார் 07, 2025 06:06

சொர்காகமே என்றாலும் அது நம்ம ஊரபோலவருமா ........


D.Ambujavalli
மார் 07, 2025 06:04

வெளிநாட்டு வாழ்வை சட்ட விரோதமாக நன்றாக அனுபவித்துவிட்டு இன்று வெளியேறும் நிலையை எண்ணி வருந்தி என்ன பயன் ?


D.Ambujavalli
மார் 07, 2025 06:04

வெளிநாட்டு வாழ்வை சட்ட விரோதமாக நன்றாக அனுபவித்துவிட்டு இன்று வெளியேறும் நிலையை எண்ணி வருந்தி என்ன பயன் ?


J.V. Iyer
மார் 07, 2025 05:17

சட்டவிரோதமாக குடியேறினால் இப்படித்தான். உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். அவர்களுக்கு கை, கால் விலங்கிட்டு வெளியேற்றினால் சரிதான். உங்கள் வீட்டிற்கு இரவு திருடவந்தவனை எப்படி கையாளுவீர்களோ அப்படித்தான் இவர்களை வைத்து செய்யவேண்டும்.. பங்களாதேசம் போன்ற மற்ற நாடுகளில் இருந்து வந்த கள்ளக்குடியேறிகளையும் இப்படித்தான் அடித்து விரட்டவேண்டும்.


selva kppk
மார் 07, 2025 07:36

இந்த ஆளுக்கு வேற வேலை இல்ல போல. எல்லா இடத்திலேயும் மூஞ்சியை பார்க்க முடிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை