உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராஜினாமா செய்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ராஜினாமா செய்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ராஜினாமா செய்தார்.சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9e1mrhgo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வந்தனர். மேலும்,ட்ரூடோவின் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளை அவர் கையாள்வதை சுட்டிக்காட்டி, அவர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, , லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் பதவியுடன், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கண்ணன்
ஜன 07, 2025 12:06

அப்பாடா, ஒழிந்தான் ஒரு இருபத்தி மூன்றாம் புலிகேசி


B MAADHAVAN
ஜன 07, 2025 10:29

நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எந்த நாடும் உருப்படாது என்பதற்கு உதாரணம்... பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மட்டுமல்ல.. தற்பொழுது கனடா... விரைவில் சீனா... அதேபோல், நம் நாட்டில், நாட்டிற்கு எதிராக செயல்படும் எல்லா எதிரிகளுக்கும் இது பொருந்தும்.


பேசும் தமிழன்
ஜன 07, 2025 08:03

தீவிரவாதிகளுக்கு துணை போய்.. இந்திய நாட்டின் எதிரியாக செயல்பட்டவர்.. போனது நல்லது தான்.


N.Purushothaman
ஜன 07, 2025 07:36

ஏற்கனவே மனைவியை பிரிந்து இருந்த நிலையில் இப்போது கட்சி பதவியை துறந்து பிரதமர் பதவியை துறந்து எவ்வளவு தியாகம் ? ..அப்பப்பா ....காலிஸ்தானுக்காக இவ்வளவு துறந்து இருக்குற இவருக்கு அந்நாட்டின் உயரிய விருது கொடுக்கோணும் ... .


Seekayyes
ஜன 07, 2025 05:15

அப்பாடி நமக்கு நிம்மதி, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வயிற்றில் புளி. இன்னா ஆட்டம். இது ஒரு நல்ல செய்திதான்.


raja
ஜன 07, 2025 04:18

எல்லா புகழும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கே........


பெரிய குத்தூசி
ஜன 07, 2025 04:03

ரா எவ்வளவு செலவு செய்து கனடா MP க்கலை விலைக்கு வாங்குகிறது என்பது முக்கியமல்ல. நம் நாடு நலனே முக்கியம். நமது ரா உளவு துறை செயல்பாடு நமது பிரதமர் மோடி அவர்களின் ராஜதந்திரம், மூலோபாயம் மெச்சத்தக்கது. இந்தியாவை பகைத்துக்கொண்டால் இப்படித்தான் ஆகும் என அணைத்து நரி நாடுகளுக்கும் புரியட்டும். அமெரிக்காவில் உள்ள MP கல் 50 மேற்பட்டோர் இந்திய ஆதரவு நிலைபாட்டிலேயே இருப்பார்கள். காரணம் மோடி அரசின் திறமைக்கு சான்று. ஒரே ஒரு கடுமையான வருத்தம், உலகத்துல பிரதமர் மோடி அய்யா எல்லார் கண்ணுலயும் விரலைவிட்டு ஆட்டுகிறார். ஆனா தமிழக விடியாத மூஞ்சி உலகின் மிக பெரிய பிரிவினைவாதி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஸ்டாலின் மட்டும் எப்படி எஸ்கேப் ஆக்குறார்னு தெரியல. கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பை இன்னும் காஸ் சிலிண்டர் வெடிப்பு என தீவிரவாதிக்கு சப்ப காட்டுவதாக இருக்கட்டும், தீவிரவாதி இறந்தால் தமிழக போலீஸ் பாதுகாப்புடன் கோவையை ஸ்தம்பிக்க வைத்து தீவிரவாதிக்கு ஊர்வலம் நடத்தும் நம் முதல்வர் ஸ்டாலின் உலகின் மிக பெரிய தீவிரவாதியே. சொந்தப்பிள்ளை சென்டிமென்டை விட்டுட்டு ஸ்டாலின் மாதிரி கூட்டத்தை ஏதாவது செயுங்க பிரதமரே.


Seekayyes
ஜன 07, 2025 05:21

பொம்மை அரசு கவிழ்க்கப்பட்டு, அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் குடுத்த தீர்ப்புதான் இப்போதிய தமிழக அரசை காப்பாற்றி வருகிறது. ஆனால் இவர்களின் இயலாமை ஆட்சியை ஏன் கவிழ்க்க கூடாது என்று மறுபடியும் கேஸ் போடலாம், ஆனால் அதன் விளைவு மணிப்பூரை காட்டி மத்திய அரசின் யார் வேண்டுமானாலும் கேஸ் போடலாம். ஜனநாயகத்தின் கேடுகளில் இதுவும் ஒன்று.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 06, 2025 22:58

கனடா விழித்து கொண்டு காலிஸ்தான் பயங்கரவாதிகளை கட்டுபடுத்த வில்லை என்றால்.....கனடா காலிஸ்தானாக மாறும்....!!!


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜன 06, 2025 22:19

இதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிடும்...


Kasimani Baskaran
ஜன 06, 2025 22:12

கண்டிப்பாக அடுத்து வருபவர்கள் தீவிரவாதம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கனடா உடைய வாய்ப்பிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை