உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை

புதிய போப் தேர்வு நடைமுறைகளை தொடங்கிய கத்தோலிக்க திருச்சபை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாடிகன்: போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் பிரான்சிஸ், இன்று தனது 88வது வயதில் காலமானார். மறைந்த அவருக்கு உலகெங்கிலும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mis5umwk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், அடுத்த போப் தேர்வு நடவடிக்கையை குறிக்கும் சடங்குகள் தொடங்கி உள்ளன. தற்காலிக சேம்பர்லைனாக, 77 வயதான கார்டினல் கெவின் ஜோசப் பாரெல், மரணத்தை உறுதிப்படுத்தவும் ஆரம்ப ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும் பணிக்கப்பட்டார்.பின்னர் அவர் போப்பின் தனிப்பட்ட குடியிருப்பை சீல் வைத்து இறுதி சடங்குகளுக்காக போப் சவப்பெட்டியை எப்போது செயின்ட் பீட்டர் தேவாலயத்துக்கு பொது பார்வைக்காக கொண்டு செல்லப்படும் என்பதை முடிவு செய்வார்.இறந்த போப் உடல் பிரேத பரிசோதனை எதுவும் செய்யப்படாது. துக்க சடங்குகள் 9 நாட்கள் நீடிக்கும். இறுதி சடங்கு மற்றும் அடக்கம் தேதியை கார்டினல்களால் தான் தீர்மானிப்பர். உறுதிப்படுத்தல் முடிந்ததும், போப்பின் உடல் அவரது தனிப்பட்ட தேவாலயத்திற்கு மாற்றப்படுவது வழக்கம்.அங்கு, அவரது பூதஉடல் ஒரு வெள்ளை நிற உடையணிந்து, துத்தநாகத்தால் மூடப்பட்ட மர சவப்பெட்டியில் வைக்கப்படும்.இறுதிச் சடங்கு பொதுவாக இறந்த நான்கு முதல் ஆறு நாட்களுக்குப் பிறகு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும். போப், புனித பீட்டர் தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவார். புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தில், போப் காலமான நாளிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்குள் தொடங்குகிறது. புதிய போப் தேர்வு எப்படி:80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. எனவே வாக்களிப்பு பல நாட்களில் பல சுற்றுகள் ஆகலாம். தேர்தல் முடிந்ததும், புதிய போப் அவர் ஏற்றுக்கொள்கிறாரா, எந்தப் பெயரை எடுக்க விரும்புகிறார் என்று கேட்கப்படும். தேவாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ​​ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும்.பின்னர் புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மீனவ நண்பன்
ஏப் 21, 2025 22:34

ஐரோப்பிய நாட்டில் பிறந்த போப்புக்கு தான் கெத்து அதிகம்


MUTHU
ஏப் 21, 2025 21:28

ஜனநாயகம் என்பதன் மிகச்சிறந்த செயலாக்கம் கத்தோலிக்க போப் தேர்வு முறை.


Nachiar
ஏப் 21, 2025 20:36

இம்முறை ஒரு பெண் அல்லது ஓர் வெள்ளையரை தவிர்ந்த வேறு இனத்தவர் தெரிந்து எடுக்கப்படுவாரா? ரெஸ்ட இன் பீஸ் போப் . ரெஸ்ட் இன் பீஸ் அர்த்தத்தைத் நன்றாக விலகியதற்கு நன்றி. இனியாவது ஹிந்துக்கள் மரணித்தால் வாசகர்கள் ரெஸ்ட் இந்த பீஸ் போடதீரிகள். போப்ட்க்கு ஒம் சாந்தி சொல்ல முடியாதோ அப்படியே இந்துக்களுக்கு ரெஸ்ட் இந்த பீஸ் சொல்லக் கூடாது. யாவரையும் அவர்கள் அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு மதிப்போம். போப்பே இன் பீஸ்


Durai Kuppusami
ஏப் 21, 2025 20:28

ஆழ்ந்த இரங்கல்.. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவரை பூஜிப்போமாக.......


மீனவ நண்பன்
ஏப் 21, 2025 20:22

எஸ்ரா மாதிரி திராவிட கொழுந்துகளை போப்பாக்க முடியாதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை