உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா ஜப்பான் உறவில் விரிசல்: 1,900 விமானங்கள் ரத்து

சீனா ஜப்பான் உறவில் விரிசல்: 1,900 விமானங்கள் ரத்து

பீஜிங்: ஜப்பான் நாட்டுடனான உறவில் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து, அந்த நாட்டுக்கு இந்த மாதத்தில் இயங்க வேண்டிய, 1,900 விமான சேவைகளை சீனா ரத்து செய்துள்ளது. தெற்காசிய நாடான தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடான சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானை அச்சுறுத்தும் வகையில், தன் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை சீனா அடிக்கடி அனுப்பி வைக்கும். இவ்வாறு தென்சீனக் கடல் பகுதியில் நிறுத்தப்படும் போர்க் கப்பல்கள் தங்களுடைய நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், பதிலுக்கு போர்க் கப்பல்களை நிறுத்துவோம் என, ஆசிய நாடான ஜப்பானின் பிரதமர் சனே டகாய்ச்சி சமீபத்தில் கூறினார். இது, இரு தரப்பு உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ஜப்பானுக்கு இயக்கப்படும், 1,900 விமான சேவைகளை ரத்து செய்வதாக சீனா நேற்று அறிவித்துள்ளது. இது இரு நாட்டுக்கும் இடையே, சீனா இயக்கும் விமான சேவைகளில், 40 சதவீதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி