உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜஸ்டின் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு: கனடா துணை பிரதமர் ராஜினாமா

ஜஸ்டின் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு: கனடா துணை பிரதமர் ராஜினாமா

ஒட்டாவா: கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சரும், துணை பிரதமருமான கிறிஸ்டியா ப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

யார் இந்த கிறிஸ்டியா ப்ரீலேண்ட்

கிறிஸ்டியா ப்ரீலேண்ட் கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர் ஆவார். அவர் நவம்பர் 2019 இல் துணைப் பிரதமராகவும், அரசுகளுக்கிடையேயான விவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.அவர் 2013 இல் டொராண்டோ மையத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச வர்த்தக அமைச்சராகவும் (2015-2017) வெளியுறவு அமைச்சராகவும் (2017-2019) பணியாற்றினார்.அவர் 2018ம் ஆண்டில் வெளியுறவுக் கொள்கை ராஜதந்திரியாக செயல்பட்டு, அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளை வலுப்படுத்தியதற்காக எரிக் எம். வார்பர்க் விருதை பெற்றார். மார்க் பால்மர் பரிசையும் பெற்றார்.ராஜினாமா குறித்து கிறிஸ்டியா ப்ரீலேண்ட் கூறுகையில், ''அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், கனடாவை முன்னேற்றும் சிறந்த வளர்ச்சிப்பாதையில் சில முரண்பாடுகளும், டிரம்பின் ஆக்கிரமிப்பு பொருளாதார தேசியவாதம் குறித்தும் விமர்சித்துள்ளேன்,'' என்று கூறியுள்ளார்.ட்ரூடோவின் மிகவும் நம்பகமான கூட்டாளிகளில் ஒருவரான ப்ரீலேண்ட் ராஜினாமா செய்துள்ளது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமைக்கு கடுமையான சரிவாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை