உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  தெலுங்கு நடிகர் பட டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்

 தெலுங்கு நடிகர் பட டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: ஜெர்மனியில் திரையிடப்படும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் புதிய படத்தை பார்ப்பதற்காக அவருடைய தீவிர ரசிகர் ஒருவர், 1 லட்சம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் அகண்டா 2.0 திரைப்படம் வரும் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. உலகம் முழுதும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், அகண்டா 2.0 திரைப்படத்தின் டிக்கெட்டை ஏலத்தில், 1 லட்சம் ரூபாய் அளித்து பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

VENKATASUBRAMANIAN
டிச 02, 2025 08:17

இந்த மாதிரி அறிவிலிகள் உள்ளவரை நாடு எப்படி முன்னேறும்.


ராமகிருஷ்ணன்
டிச 02, 2025 07:07

டுமிழனுக்கு சற்றும் குறையாத கொல்டீஸ், சினிமா ஒரு சாபக்கேடு


karthik
டிச 02, 2025 07:46

அதை நீ சொல்கிறாய்.


KOVAIKARAN
டிச 02, 2025 07:00

ரூ. 1 லட்சம் என்பது ஜெர்மனி பணமதிப்பில் 960 ஈரோக்கள். நேற்றைய Euro EUR வின் மதிப்பு 1 யூரோ ரூ. 104.05. எனவே அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. நம் நாட்டிலும் குறிப்பாக சென்னை, ஹைராபாத் போன்ற நகரங்களில் ரூ. 5000 க்கு சினிமா டிக்கெட் வாங்கும் வெறி கொண்ட அறிவிலிகள் நிறைய உண்டு என்று நாம் அறிவோம்.


Thravisham
டிச 02, 2025 06:32

ஒரு சில குடும்பங்களின் ஆதிக்கத்தில் உள்ள தெலுங்கு சினிமாக்களை ஆதரிக்க சில தீவிர ரசிகர்கள். தெலுங்கு திரைப்படங்கள் வெறும் அடிதடி, மாயாஜாலம், பிரமாண்டம், குத்துப்பாட்டு அவ்வளவே. புது வரவுகள் தேடல்கள் இல்லை. வெகு விரைவில் கழிவு நீர் குட்டையாகி விடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை