உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்

நிதி மோசடி: 200 இந்தியர்களை நீக்கியது அமெரிக்க நிறுவனம்

வாஷிங்டன்: மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்தியர் 200 பேரை அமெரிக்க நிறுவனம் பணி நீக்கம் செய்தது.பெடரல் நேஷனல் மார்ட்கேஜ் அசோசியேஷன் ( எப்.என்.எம்.ஏ ), எனப்படும் இந்நிறுவனம் பொதுவாக பேன்னி மே என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அடமான நிறுவனமான பேன்னி மே, அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 200 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் தெலுங்கு பின்னணியைச் சேர்ந்தவர்கள்.நிறுவனங்களை ஏமாற்றவும் நிதியை தவறாகப் பயன்படுத்தவும் வட அமெரிக்க தெலுங்கு சங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததாக பல ஊழியர்கள் மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் ஒருவர், சங்கத்தின் பிராந்திய துணைத் தலைவராக இருந்ததாகவும், மற்றொருவர் அமெரிக்க தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவரின் மனைவி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.டி.ஏ.என்.ஏ.,எனப்படும் தெலுங்கு வட அமெரிக்க சங்கம் மட்டுமின்றி பிற சங்கங்களும் விசாரணையில் உள்ளன.பேன்னி மேயுடன் பணிபுரியும் சிலர், ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பணிநீக்கங்கள் செய்யப்பட்டதாகவும், அவை நெறிமுறை அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.இது குறித்து வர்ஜீனியாவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க காங்கிரசை சேர்ந்த சுஹாஸ் சுப்பிரமணியம் கூறியதாவது:இந்த விவகாரத்தில் பணியாளர்கள் மீது குற்றம்சாட்டிய பேன்னி மே , முழு விசாரணையை நடத்தாமலோ அல்லது ஆதாரங்களை வழங்காமலோ அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பணி நீக்கம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேன்னி மே நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.இந்த அமைப்பில் உள்ள ஊழியர்கள் பலருடன் நான் பேசியுள்ளேன் . அவர்களுக்கு உரிய நடைமுறை தேவை. பேன்னி மே அவர்களுக்கும், காங்கிரசுக்கும், அமெரிக்க மக்களுக்கும் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு சுஹாஸ் சுப்பிரமணியம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கிருஷ்ணதாஸ்
ஏப் 17, 2025 07:56

Too late!


Rk
ஏப் 16, 2025 22:43

தெலுங்கு திருடர்களை நிரந்தரமாக வெளியேற்றி பிச்சை எடுக்க இந்தியா அனுப்ப டிரம்ப் உடனடியாக செயல்படுவார். உண்மையான அமெரிக்க தலைவர்.


Amar Akbar Antony
ஏப் 16, 2025 21:19

ஓங்கோல் என்கிறார்களே அது எங்கிருக்கிறது.அப்படியா?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 16, 2025 20:17

அதாவது நான் உறுப்பினராக இருக்கும் தெலுங்கு சங்கத்திற்கு ஆயிரம் டாலர் டொனேஷன் தருவேன். அதற்கு இணையாக நான் வேலை செய்யும் நிறுவனமும் எனது தெலுங்கு சங்கத்திற்கு ஆயிரம் டாலர் டொனேஷன் தருவார்கள். அந்த பணம் வந்ததும் எனது தெலுங்கு சங்கம் என்னுடைய ஆயிரம் டாலரை என்னிடமே திருப்பி கொடுத்துவிடுவார்கள். கூடவே நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இலவசமாக வந்த ஆயிரம் டாலரில் எனக்கு கமிஷனும் கொடுப்பார்கள். இப்படியே சும்மா ஓஷி ஓஷி ஓஷி டாலர் சம்பாதிக்கலாம்.


kannan sundaresan
ஏப் 16, 2025 19:28

இந்தியாவின் பெயரை கெடுக்கவே இவனுக கிளம்பிட்டானுங்க.


தாமரை மலர்கிறது
ஏப் 16, 2025 19:11

இந்தியாவின் ஊழலை அமெரிக்காவிற்கு கொண்டுவந்த தெலுங்கர்கள்.


அப்பாவி
ஏப் 16, 2025 19:01

அமெரிக்ஜ நிறுவனங்கள் நல்லெண்ணத்தின் அடிபடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி நன்கொடை அளிக்கின்றன. அதாவது நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு 100 டாலர் நன்கொடை அளித்தால் அமெரிக்க நிறுவனம் 100 டாலர் நன்கொடை அளிக்கும். அங்கே வாழும் திருட்டு தெலுங்கர்கள் சிலர் தெலுங்கு தொண்டு நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருந்து கொண்டே ஒரு 1000 டாலர் ந்ன்கொடை குடுப்பது போல் போலி ரசீது காமிச்சு, தாங்கள் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனங்களிடம் 1000 டாலரை மேட்சிங் டொனேஷனாக கறந்து விடுகிறார்கள். முன்னாடி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும். இப்போ அதையே தொழிலாக செஞ்சுடறாங்க. அங்கேயெல்லாம் மாட்டுனா நேரா வூட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இது போல இன்னும் நிறைய பேர் வூட்டுக்குப் போக வாய்ப்பிருக்கு. வேற எங்கும் வேலைக்கும் போக முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை