உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்

 கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்

டூஅலா: அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேமரூன் எதிர்க்கட்சித் தலைவர் ஏனிசெட் இகானே, 74, உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார். மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில், 1982 முதல் அதிபராக உள்ளவர் பவுல் பியா, 92. உலகிலேயே மிக வயதான அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்டில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பவுல் பியா அறிவித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வாறு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்ட புதிய சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான ஆப்ரிக்க இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஏனிசெட் இகானே, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறையில் நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை