உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மரண தண்டனை பிடியில் சிக்கிய கேரளா நர்ஸ்: ஏமன் நாட்டில் இருந்து மீட்பதில் புதிய சிக்கல்;

மரண தண்டனை பிடியில் சிக்கிய கேரளா நர்ஸ்: ஏமன் நாட்டில் இருந்து மீட்பதில் புதிய சிக்கல்;

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சனா: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதற்கான முயற்சி தடைபட்டு உள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, அதிக சம்பளத்தை வழக்கறிஞர் எதிர்பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரை காப்பாற்ற தாயார், பிரேமா குமாரி 5 மாதங்களாக ஏமனில் முகாமிட்டு உள்ளார்.ஏமன் நாட்டு சட்டப்படி பிளட் மணி( இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக , தலால் அப்தோ மஹ்தி தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா அமீர் என்ற வழக்கறிஞர், இந்தியா அரசு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஜூலை 4ம் தேதி அவருக்கு 19,871அமெரிக்க டாலர் பணம் வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது. ஆனால், அவர், மேலும் 20 ஆயிரம் டாலர் பணம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் எனக்கூறியுள்ளார். இதனால், பேச்சுவார்த்தை நடப்பது தடைபட்டுள்ளது. 'கிரவுடு பண்டிங்' என்ற முறையில் வெளிநாடு வாழ் மலையாளிகளிடம் நிதி திரட்டித்தான், ஏற்கனவே பணம் வழங்கப்பட்டது. இப்போது மேலும் அதே அளவு பணத்தை எப்படி திரட்டுவது, யாரிடம் உதவி கோருவது என்று தெரியாமல், அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சொல்லின் செல்வன்
செப் 10, 2024 17:43

இப்ப இந்த செய்திக்கும் நீங்க போட்ட கமெண்டுக்கும் என்ன சம்பந்தம் ?


என்றும் இந்தியன்
செப் 10, 2024 16:47

அப்படியா வெறும் 40000 அமெரிக்க டாலர் போதுமா ????


Ganapathy
செப் 10, 2024 14:32

..நமக்கு கிறிஸ்தவ ஓட்டு ரொம்ப முக்கியம்..


SUBRAMANIAN P
செப் 10, 2024 13:36

அங்கெல்லாம் வெளிய வரதுக்கு பெரும்பணம் கொடுக்கணும். கஷ்டம். எங்க ஊர்ல ஈஸியா சட்டத்துல இருக்குற லட்சம் ஓட்டையில எதாவது ஒரு ஓட்டையில இருந்து வந்துரலாம்.


Vijay
செப் 10, 2024 13:01

Punishment!


Vijay Siva
செப் 10, 2024 13:00

Tragedy!


God yes Godyes
செப் 10, 2024 12:54

எதுக்கு மூர்க்காஸ் கண்ட்ரிகளுக்கு போகணும். அவங்கள பாத்து பொம்பள புள்ளைகளும் துட்டுக்கு ஆசைபட்டு அங்க போகணும்.


God yes Godyes
செப் 10, 2024 12:49

சமயம் பாத்து பணத்தை உருவுகிறான்.


Sivagiri
செப் 10, 2024 12:37

திராவிட கும்பல் தலையிடுமா ? . . இந்திய விமான கம்பெனிகளை விட , அரபி விமான கம்பெனிகள் இந்தியாவுக்கு அதிகமான விமானங்களை இயக்க, ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் அரபிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்


Kumar Kumzi
செப் 10, 2024 14:22

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட டுமீல் நாட்டுல மட்டும் கூவு அடிமையே


rsudarsan lic
செப் 10, 2024 12:17

கபில் சிபலை அனுப்பலாம். பேச்சு பேசவே இவ்வளவு கட்டணம் அது வெற்றி பெறுமா தெரியாது. கொலை முகாந்திரம் தெரியாது.


என்றும் இந்தியன்
அக் 26, 2024 18:33

அவருடைய பீஸ் தெரியாதா உங்களுக்கு ஒரு தடவை கோர்ட்டில் appear ஆக ரூ 1.5 கோடி அதாவது 1,80,723 டாலர்


புதிய வீடியோ