உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்; நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்; நேட்டோ அமைப்பு கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ரஷ்யா உடன் வர்த்தகம் செய்து அதன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்' என நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்து உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0an9o1qi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியதாவது: நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியும்.ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும். தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தால் 100% பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளின் தலைவர்கள், புடினை அழைத்து தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.எனவே தயவுசெய்து புடினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சு வார்த்தைகளில், தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையெனில் இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.''ரஷ்யாவின் எண்ணெய் வாங்குபவர்களில் இந்தியா முன்னணியில் உள்ளது; தடைகள் விதிக்கப்பட்டால் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்'' என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

பேசும் தமிழன்
ஜூலை 16, 2025 21:50

அப்படி தடை போட்டால் ....பாதிப்பு உங்களுக்கு தான் .....என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில் .....ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ??


Rajalakshmi
ஜூலை 16, 2025 13:46

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் இந்தியா பயப்படக்கூடாது. ரஷ்யாவுடன் இந்த போரை உருவாக்கியதே அமெரிக்காவின் deep state .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 16, 2025 13:28

எதேச்சிகாரப் போக்கு ...........


Ramalingam Shanmugam
ஜூலை 16, 2025 13:07

நீங்க தினம் தினம் ஒன்னு சொல்றிங்க


RAJASEKAR
ஜூலை 16, 2025 12:40

உங்கள் தடை இந்தியாவை ஒன்றும் செய்யாது.


அசோகன்
ஜூலை 16, 2025 12:34

இது ஒன்னும் பழைய இந்தியா இல்லை பயந்து கைகட்டி உபி ஸ் போல் இருக்க..... இது எங்க மோடிஜி இந்தியா.... ஒரு அடி அடிச்சா பத்து அடி திருப்பி விழும்


கல்யாணராமன்
ஜூலை 16, 2025 12:29

எந்த நாட்டில் வர்த்தகம் வைத்துக்கொள்ள வேண்டும், கூடாது என்பதை அந்தந்த நாடுகள் முடிவு செய்ய வேண்டும் மற்றபடி வேறொரு நாடோ அமைப்போ அறிவுறுத்தல் செய்ய கூடாது.


Appaaa
ஜூலை 16, 2025 11:59

நீ யாரு கோமாளி இந்தியாவை மிரட்ட ???


saravan
ஜூலை 16, 2025 11:12

என் உங்க டிரம்ப் நான் நான் என்பார் வேலைக்கு ஆகலையா


ராமகிருஷ்ணன்
ஜூலை 16, 2025 11:08

நீங்கள் ராகுல்காந்தியிடம் சொல்லுங்க. ஆர்வமுடன் கேட்டுக் கொள்வார், நீங்கள் பைசா கொடுத்தால் உங்களுக்காக குரல் கொடுப்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை